மும்பாய் - கொழும்புக்கான விஸ்தாரா விமான சேவைகள் | தினகரன் வாரமஞ்சரி

மும்பாய் - கொழும்புக்கான விஸ்தாரா விமான சேவைகள்

இந்தியாவின் டாடா சகோதரர்கள் மற்றும் சிங்கப்பூர் ஏயர்லைன்ஸின் கூட்டுமுயற்சியில் மும்பாய் - கொழும்புக்கான விஸ்தாரா - விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விஸ்தாரா விமான சேவைகள் தற்போது மும்பை மற்றும் கொழும்புக்கு இடையே தினமும் (புதன்கிழமைகளைத் தவிர) தனது சேவையை வழங்குகிறது. இதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணத்தின்போது பிரிமியம் எகனாமி வகுப்புத் தேர்வை முதலில் வழங்குவதோடு பொருளாதார மற்றும் வணிக வகுப்புக்களையும் மேலதிகமாக சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கடந்த திங்களன்று (25) மும்பாயிலிருந்து வந்த விஸ்தாரா விமானப் பயணிகளுக்கு கொழும்பில் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது மட்டுமன்றி இலங்கையர்களின் இனிப்புக்களும் வழங்கப்பட்டு விசேட பாரம்பரிய நடனமான கண்டிய நடனக் குழுவினரால் நடனமாடி சிறப்பாக வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வின்போது விஸ்தாராவின் விசேட விருந்தினர்களான விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒழுங்குமுறை பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பா, தலைமை விமான நிலைய முகாமையாளர், விமான நிலையம் மற்றும் சிவில் விமான சேவைகள் (இலங்கை) இலங்கையின் சிவில் விமான போக்குவரத்துசபையின், இலங்கை விமான சேவைகள் தலைமை முகாமையாளர் எச்.எஸ். ஹெட்டியாராச்சி மற்றும் ஹேலிஸ் பி.எல்.சி.யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ருவன் வைத்தியரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இதுகுறித்து கருத்து தெரிவித்த விஸ்தாராவின் தலைமை வியூக அதிகாரி வினோத் கண்ணன், சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கான மகத்தான ஆற்றலைக் கொண்ட ஒரு நாடான இலங்கைக்குள் விமானங்களுடன் மற்றுமொரு புதிய புவியியல் ரீதியாக நுழைவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புக்கள் மற்றும் நியாயமான சேவைகளை வழங்குவதன் மூலம் உலகெங்கிலும் ஒரு அடையாளத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள இந்தியாவின் ஐந்து நட்சத்திர விமான சேவைகளை மட்டுமே நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். விஸ்தாரா விமான சேவையின் ஊடாக பயணம் செய்யும் பயணிகள் புதிய உணர்வையும் ஒப்பிடமுடியாத விருந்தோம்பலையும் அனுபவிப்பார்கள் என நம்புகிறோம் என்றார்.

Comments