காலத்துக்கு காலம் வந்த ஜனாதிபதிகளின் கொடிகள் | தினகரன் வாரமஞ்சரி

காலத்துக்கு காலம் வந்த ஜனாதிபதிகளின் கொடிகள்

நாகரீக வளர்ச்சியின் ஆரம்பத்துடன் குலம், கோத்திரம் மற்றும் பிரதேச ரீதியாக தனித்தன்மையை உறுதி செய்வதற்கு எடுத்த முயற்சியின் பலனாகவே பல குறியீடுகளின் பாவனை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. அதன்படி தற்போது அனைத்து நாடுகளும் தமது தனித்தன்மை வெளிக்காட்ட பல குறியீடுகளுடன் கூடிய கொடிகளை பாவிப்பது கட்டாயமானதாக மாறியுள்ளது. அதனைப் பின்பற்றி இலங்கையும், தேசிய கொடியைப் போல மாகாணம் மற்றும் மாவட்டங்களை வேறுபடுத்தி அறிந்துகொள்வதற்காக கொடிகளைப் பாவிக்க தொடங்கியது என எண்ணமுடியும். பின்னர் அக்கொடிகளில் குறியீடுகளாக அந்தந்த பிரதேசங்களுக்கேயுரிய மிருகங்கள் மற்றும் பறவைகளை பயன்படுத்தியதை காண கூடியதாகவுள்ளது. சில வேளைகளில் மகரம், யாழிபோன்ற கற்பனையான மிருகங்களும் பாவிக்கப்பட்டுள்ளன. அதைத்தவிர சூரிய, சந்திர, தெய்வ உருவங்களும் இந்நாட்டின் பிரபலமான புராணக் கதைகளில் வரும் பாத்திரங்களும் குறியீடுகளில் அடங்கியிருந்தன.  

இலங்கையின் தேசிய கொடியைப் பற்றி ஆராய்கையில் அது இலங்கையின் முதலாவது மன்னனின் சரித்திரம் வரை செல்கின்றது. அதாவது இந்நாட்டின் முதலாவது அரசனான விஜயன் பௌத்த வருடம் 486ல் இந்தியாவிலிருந்து இந்நாட்டிற்கு வந்தபோது சிங்கத்தின் உருவம் பொரித்த கொடியொன்றை கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. அன்று விஜய மன்னன் அக்கொடியை சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்பை அடையாளப்படுத்தும் நோக்கத்துடனேயே பாவித்திருக்க வேண்டும். அன்று தொடக்கம் சிங்கத்தின் அடையாளம் மிக முக்கிய அடையாளமாக இந்நாட்டு சரித்திரத்தில் இணைந்துள்ளது. துட்டகைமுனு அரசன் காலத்தில் அப்போது வடக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களின் அதிகாரத்தை கைப்பற்றியிருந்த எல்லாள மன்னனுடன் போர் புரிந்த போது அடையாளமாக இக்கொடியை பாவித்ததாக கூறப்படுகின்றது. துட்டகைமுனு ஏந்திச் சென்ற கொடியில் சூரிய, சந்திர அடையாளத்துடன் வலது கையில் வாளேந்திய சிங்கத்தின் உருவமும் பொரிக்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் இந்நாட்டில் 1815ல் கண்டி இராசதானியின் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க அரசனின் ஆட்சி காலத்தில் முடிவில் கண்டி உயர்குடியினரால் பிரித்தானியருடன் கைச்சாத்திட்ட கண்டி ஒப்பந்தத்தின் போதாகும். ஜோர்ஜ் அரசன் இந்நாட்டு மன்னனை நியமிக்கப்பட்டதோடு, அங்கு சிங்களவர்கள் கொண்டு வந்த சிங்க கொடி ஐக்கிய கொடியென கூறப்பட்டு பின்னர் தேசிய கொடியாக மாற்றம் பெற்றதென கூறப்படுகின்றது. ஆனால் ஆங்கிலேயர்கள் அவர்களுக்கான விசேட கொடியொன்றை பாவித்துள்ளார்கள் இலங்கையில் தற்போது பாவிக்கப்படும் கொடியில் பல சந்தர்ப்பங்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் பழைய தேசிய கொடியின் தனித்தன்மை நீக்கப்படவில்லை.

இனத்தினதும் நாட்டினதும் புராதன பின்னணி, கம்பீரம், இறைமை, மற்றும் சுயாதீனம் போன்று இலங்கை மக்களின் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் காட்டும் அடையாளங்கள் தேசிய கொடியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் அரசியலமைப்பில் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.  

அதேபோல இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் தலைவரான ஜனாதிபதிக்கும் தனக்கேயுரிய உத்தியோகபூர்வ கொடியொன்று உள்ளதோடு, அது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதுவரை தெரிவான ஜனாதிபதிகள் அனைவரும் அவ்வாறான கொடிகளை பாவித்துள்ளார்கள். ஜனாதிபதியொருவர் சத்தியபிரமாணம் செய்த பின்னர் கொடியொன்றை தெரிவு செய்வதுடன் அவர் அதனைத் தனது இலச்சினையாகவும் கொள்வார். ஜனாதிபதியின் கொள்கைகளை பிரதிபலிக்கும் சம்பிரதாய அடையாளங்களை உள்ளடக்கி அமைக்கப்படும் கொடி தேசிய கொடியைப் போல் செவ்வக வடிவானதாகும்.  

1972ம் ஆண்டு மே 22 தொடக்கம் 1978 பெப்ரவரி 4ம் திகதி வரை ஜனாதிபதி பதவியை வகித்த வில்லியம் கொபல்லாவ பாவித்த உத்தியோகபூர்வ கொடி மிகவும் எளிமையானது. நீல நிற பின்னணியில் அரச இலச்சினையுடன் கூடிய ஸ்ரீலங்கா என்னும் நான்கு எழுத்துக்களை மாத்திரம் கொண்டிருந்தது.  

இந்நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன 1978 பெப்ரவரியிலிருந்து 1984 ஜனவரி வரையான பதவி காலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை பின்னணியாகக் கொண்ட மஞ்சள் நிற தர்மசக்கரம் கொண்ட கொடியையே பாவித்தார். பச்சை நிற கரையொன்று கொடியை சுற்றி காணப்பட்டது.  

1989 ஜனவரியிலிருந்து 1993 மே 1ம் திகதி வரை ஜனாதிபதி பதவி வகித்த இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதியான ரணசிங்க பிரேதாசவின் உத்தியோகபூர்வ கொடியில் சிவப்பு மற்றும் கடுஞ்சிவப்பு நிறம் கலந்திருந்ததோடு மத்தியில் தாமரை மலர் காணப்பட்டது. ஆறு இலைகளும் மாற்றமின்றி காணப்பட்டன.  

ஜனாதிபதி பிரேமதாச ரணசிங்கவின் அகால மரணத்தின் பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட டீ.பீ விஜேதுங்கவின் கொடி ஜனாதிபதி பிரேமதாஸ பாவித்த கொடியை விட முற்றிலும் மாறுபட்டிருந்ததோடு நான்கு மூலைகளிலும் அரச இலைகள் காணப்பட்டன. குறுகிய காலம் அதாவது 1993மே தொடக்கம் 1994 நவம்பர் மாதம் 12 திகதி வரையுமே பாவிக்கப்பட்டது.  

1994 நவம்பர் 12ம் திகதி இந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 2005 நவம்பர் 19ம் திகதி வரை இருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்தார். அவர் பாவித்த உத்தியோகபூர்வ கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கலந்திருந்ததோடு நான்கு மூலைகளிலும் அரச இலைகள் காணப்பட்டன. நடுவில் சிவப்பு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த அடையாளமொன்றிருந்தது.  

2005 நவம்பர் 19ம் திகதி ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ கொடி கருஞ் சிவப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தை கொண்டிருந்தது. அதன் நடுவில் தாமரை மலர் காணப்பட்டதோடு. நான்கு மூலைகளிலும் அரச இலைகள் காணப்பட்டன.  

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கடந்த 18ம் திகதி சத்தியப்பிரமாணம் செய்த கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ கொடியின் தொனிப்பொருளான தூய்மை, அடையாளப்படுத்துவது வெள்ளை தாமரையாலாகும்.

அது ஆட்சியாளரின் நீதியான ஆட்சியை அடையாளப்படுத்துவதோடு தாமரையிலிருந்து நாலாபுறமும் விரியும் இலை புகழை நாட்திசையிலும் பரப்புவதையும் அடையாளப்படுத்துகின்றது. தாமரை மலரை சுற்றியுள்ள மஞ்சள் நிற விட்டம் ஞானத்தையும் வெள்ளை நிற வட்டம் சத்தியத்தையும் அடையாளப் படுத்துகின்றது. அரச இலைகளும் நான்கு மூலைகளில் காணப்படுகின்றன.  

அவை புத்தமதத்தால் இனத்துக்கு கிடைத்துள்ள புகழையும் மனித இனத்தின் மகிழ்ச்சிக்கான நான்கு காரணிகளையும் குறிக்கின்றன.

அதைத்தவிர நான்கு மூலைகளிமுள்ள அல்லி மலர்கள் சர்வதேச தொடர்பையும் மஞ்சள் மற்றும் பச்சை நிறம் சிறுபான்மை மக்களையும், நெல் மணிகள் மற்றும் குரக்கன் பூக்கள் மூலம் தன்னிறையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.  

இக்கொடியின் பிரதான நிறமாக (குரக்கன் நிறம்) கடும் மண்ணிறம் உள்ளதோடு அது ஜனாதிபதியின் விவசாய வழித் தோன்றலையும் கொடியை சுற்றியுள்ள வெள்ளை கோட்டின் மூலம் இனங்களுக்கிடையேயான ஒற்றுமை, சமாதானம் மற்றும் புரிந்துணர்வையும் வெளிகாட்டுகின்றது.

மொறட்டுவை பல்கலைக்கழக பட்டதாரியான ஜனத் ஜயசிங்கவே இக்கொடியை தயாரித்துள்ளார்.

சுரேகா நில்மினி இலங்ககோன்

Comments