மதர் ஸ்ரீ லங்காவின் புதிய காட்சியறை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் | தினகரன் வாரமஞ்சரி

மதர் ஸ்ரீ லங்காவின் புதிய காட்சியறை ஸ்ரீ ஜயவர்தனபுரவில்

சுயாதீன, இலாப நோக்கற்ற அமைப்பான மதர் ஸ்ரீ லங்கா (MSL) அமைப்பினால் முன்னெடுக்கப்படும் “தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டல்“ எனும் திட்டத்தினூடாக அனுகூலம் பெறுவோரினால் உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டு தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக புதிய காட்சியறை ஒன்றை கோட்டே பகுதியில் திறந்துள்ளது. பாராளுமன்ற வீதியில், இல. 614, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி (பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் வீதியின் வாழை இலை பேருந்து தரிப்பிடத்துக்கு முன்னால்) எனும் முகவரியில் இந்த காட்சியறை நிறுவப்பட்டுள்ளது. சேதன உணவு மற்றும் பானங்கள், கைவினை ஆபரணங்கள், கைத்தறி புடவைகள், கோப்பைகள், கற்கள் பதிக்கப்பட்ட பொருட்கள், டெராகொடா பொருட்கள், சிற்பி மற்றும் சிரட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், செரமிக் பொருட்கள் முதல் காகிதாதிகள் மற்றும் இதர கலைப் பொருட்கள் போன்றன விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

MSL அமைப்பினால் முன்னெடுக்கப்படும் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டல் ஊடாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் 100 ரூபாய்க்கு 100 புன்னகைகள் எனும் தொனிப்பொருளில் லவ் ஸ்ரீ லங்கா எனும் உப கருப்பொருளில் விற்பனை செய்யப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு முதல் இயங்கும் இந்தத் திட்டத்தினூடாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை, குருநாகல், பொலன்நறுவை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தினூடாக உற்பத்தி செய்யப்படும் சகல தயாரிப்புகளும் 100% இலங்கையில் தயாரிக்கப்பட்டவையாக அமைந்துள்ளதுடன், இலங்கையின் பிரத்தியேகத்தன்மையை ஊக்குவிப்பதுடன், இலங்கையின் கலை மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன. தேசிய அடையாளம் மற்றும் அழிவடைந்து செல்லும் இலங்கையின் கலைத் துறைகளை பாதுகாக்கும் வகையில் இக்காட்சியறை காணப்படுகின்றது. 

Comments