அற்புதமான பெறுபேறுகளை பதிவு செய்துள்ள Daraz 11.11 | தினகரன் வாரமஞ்சரி

அற்புதமான பெறுபேறுகளை பதிவு செய்துள்ள Daraz 11.11

Daraz.lk இலத்திரனியல் வணிக இணையத்தளம் நடாத்திய விற்பனை முன்னெடுப்பு 2019பிரசாரம் நவம்பர் 11ஆம் திகதியன்று முடிவடைந்த தருணத்தில் சாதனைமிகுந்த விற்பனையை அடைந்து கொண்டுள்ளது. மிக வேகமாக வ ளர்ச்சியடைந்து வருகின்ற இலத்திரனியல் வணிக இணையத்தளமாக திகழும் டராஸ் (Daraz) ஆனது 11.11விற்பனை முன்னெடுப்பு காலப்பகுதியில் 125,000ஓடர்களை பெற்றுக் கொண்டதன் மூலம், தனது எதிர்பார்க்கப்பட்ட விற்பனை இலக்கை விட மிதமிஞ்சிய, 140%விற்பனையை அடைந்துள்ளது. இலத்திரனியல் வணிகத்தில் வாடிக்கையாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதை இது எடுத்துக் காட்டுகின்றது. 

தேர்தலுக்கு முன்னரான காலப் பகுதியாக அது காணப்பட்ட போதிலும், 11.  தேர்தலுக்கு முன்னரான காலப் பகுதியாக அது காணப்பட்ட போதிலும், 11.11முன்னெடுப்பின் கீழ் கிடைக்கப் பெற்ற கொள்வனவுக் கட்டளைகளில் 75சதவீதமானவை, குறிப்பிட்ட முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்ட காலத்திற்குள்ளேயே வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதை டராஸ் உறுதிப்படுத்தியது. இது நிறுவனத்தின் வினைத்திறனுக்கும், தமது வாடிக்கையாளர்களின் முகங்களில் ஒரு புன்னகையை ஏற்படுத்துவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கும் ஒரு அத்தாட்சியாக அமைகின்றது. 11.11முன்னெடுப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட போது - இலத்திரனியல் உபகரணங்கள், கையடக்கத் தொலைபேசிகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், வாழ்க்கைமுறைப் போக்கு சார்ந்த உற்பத்திகள், நவநாகரிகம் தொடா்பான பொருட்கள் மற்றும் தினசரி அவசியமான பொருட்கள் (FMCG) ஆகியவற்றுக்கு அதிகளவான கிராக்கி காணப்பட்டது. 

இதேவேளை, 2500 விற்பனையா ளர்கள் இந்த விற்பனை முன்னெடுப்பில் பங்கேற்றதன் மூலம், விற்பனை நிறுவனப் பங்காளிகள் டராஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் 11.11 மீள் உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதன் பயனாகவே அபாிமிதமான விற்பனை மற்றும் வருமானத்தை உருவாக்க முடிந்தது. இந்த ஊக்குவிப்பு முன்னெடுப்பில் 200,000 இற்கும் அதிகமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், மேற்படி விற்பனைப் பங்காளிகளால் கவர்ச்சிகரமான விலைக் கழிவுகளும் வழங்கப்பட்டன. 

Comments