கிறிஸ்புரோ ஊழியர்களின் பிள்ளைகளால் வடிவமைக்கப்பட்டுள்ள சித்திரங்கள் | தினகரன் வாரமஞ்சரி

கிறிஸ்புரோ ஊழியர்களின் பிள்ளைகளால் வடிவமைக்கப்பட்டுள்ள சித்திரங்கள்

2020ஆம் ஆண்டுக்கான கலண்டரில்

இலங்கையின் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ, சமூக மற்றும் ஊழியர்கள் தொடர்பிலான அக்கறையை முன்னெடுத்துச் செல்லும் முகமாக 2020ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை நாடு முழுவதிலும் பரவியுள்ள கிரிஸ்புரோ நிறுவன ஊழியர்களின் பிள்ளைகளது சித்திரங்களால் வடிமைத்துள்ளது. 

கிரிஸ்புரோ நிறுவனத்தின் மனித வள பிரிவினால் நாடு முழுவதிலுமுள்ள 18கிரிஸ்புரோ வர்த்தக மத்திய நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களது பிள்ளைகளுக்காக நடத்தப்பட்ட சித்திரம் வரைதல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12சித்திரங்களை 2020ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் உள்ளடக்கியுள்ளது. இந்த சித்திரக்கலைப் போட்டிக்காக 176பிள்ளைகள் கலந்து கொண்டதுடன் இதில் கலந்து கொண்ட பிள்ளைகளை, சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் சிரேஷ்ட ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. 

கிரிஸ்புரோவினால் தமது சமூக பொறுப்புணர்ச்சி பயணத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பசுமை பராமரிப்பு, உடற்பயிற்சி ஊக்குவிப்பு, சமூக மையம், கிரிஸ்புரோ நெக்ஸ்ட் சாம்ப் (Crysbro Next Champ) மற்றும் சுகாதாரம் ஆகிய தொனிப்பொருள்களின் கீழ் சித்திரங்களை வரைவதற்கு சிறுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. போட்டியின்போது முன்வைக்கப்பட்ட சித்திரங்களில் 18சித்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு கம்பளை வலயக் கல்விப் பணிப்பாளர்  சம்பத் கலந்து கொண்டார். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 18பேரில் சிறந்த 12சித்திரங்களை கிரிஸ்புரோ நிறுவனம் தெரிவு செய்து தமது 2020ஆண்டு நாட்காட்டியிலும் ஏனைய 6சித்திரங்களை ஒவ்வொரு வருடமும் கிரிஸ்புரோவினால் அனைத்து ஊழியர்க ளது பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் அப்பியாசப் புத்தகங்களில் முதல் பக்கத்தில் அச்சிட்டு வழங்குவதற்கும் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

2020 நாட்காட்டிக்கான வெற்றியாளராக தெரிவான பிள்ளைகளின் சித்திரங்களுக்கு மேலதிகமாக அதனை வரைந்தவர் மற்றும் அவனது அல்லது அவளது குடும்ப உறுப்பினா்களடங்கிய குழு புகைப்படமும், கிரிஸ்புரோவின் 18 சேவை மத்திய நிலையங்களில் ஒரு மத்திய நிலையத்தின் படமும் மற்றும் அதன் விபரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

Comments