விவசாயத்துறைக்கான சந்தை தகவல் கட்டமைப்பு Govipola app அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

விவசாயத்துறைக்கான சந்தை தகவல் கட்டமைப்பு Govipola app அறிமுகம்

அரசாங்கத்தின் e-விவசாய மூலோபாயத்தின் பிரகாரம் விவசாயத் துறையில் இலத்திரனியல் சந்தைப்பகுதி ஒன்றை நிறுவுவதற்கு TAMAP உதவிகளை வழங்கியுள்ளது. இந்த செயற்பாடுகளின் பயனாக விவசாய வியாபார கட்டமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை தகவல் கட்டமைப்பு கடந்த 28ஆம் திகதி Govipolaapp ஐ அறிமுகம் செய்துள்ளது. கொழும்பு Movenpick ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் விவசாயத்துறைக்கு மேம்படுத்தப்பட்ட சந்தை தகவல் கட்டமைப்பு எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சிப்பட்டறையில் இந்த app அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் ஆலோசனை நிறுவனமான Ecorys Nederland B.Vஇனால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் விவசாய நடவடிக்கைகளை நவீன மயப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித் திட்டம் (TAMAP) ஊடாக இலங்கையின் அரசாங்கத்துக்கு நிலைபேறான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது.  

இலங்கையைச் சேர்ந்த Croptronix நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள Govipolaapp ஒன்லைன் பக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. பத்திரிகை விளம்பரங்களைப் போன்று, மக்கள் தமக்கு தேவையானதை விற்பனைக்கு பதிவிடுவதும், கொள்வனவாளர்கள் பார்வையிடும் பக்கமாகவும் இது அமைந்துள்ளது. இன்றைய நிலையில் நாடு முழுவதிலும் இந்த Govipolaapp ஐ 15000பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளை டிஜிட்டல் கட்டமைப்பினூடாக இலகுவாக சந்தைப்படுத்திக் கொள்ளமுடியும். கொள்வனவாளர்களுக்கு தெரிவுக்கமைய தேடல் மற்றும் அறிவித்தல்கள் (notifications) போன்ற வசதிகளை பெறமுடியும் என்பதால், தமக்கு அவசியமான பொருட்களை இலகுவாக காலவிரயமின்றி தேடிக் கொள்ளமுடியும்.  

தொடர்ச்சியான வடிவமைப்பு செயன்முறையின் அங்கமாக, இந்த app தற்போது விநியோகத்தர்களுக்கு இலகுவாக ஆர்வமுள்ள கொள்வனவாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வசதியை வழங்குகின்றது.

விற்பனை பங்காளர் ஒருவருடனான தொடர்பை app இதனூடாக அல்லது கட்டமைப்பில் காணப்படும் call-to-action நேரடி தொலைபேசி அழைப்பினூடாக மேற்கொள்ளமுடியும். இந்த எளிமையான app ஊடாக, விவசாயியை நேரடியாக ஏற்றுமதியாளர், விற்பனையாளர் அல்லது நுகர்வோருடன் தொடர்புபடுத்துகின்றது.  

app இல் காணப்படும் பாவனையாளருக்கு நட்பான கட்டமைப்பு, மும்மொழிகளிலும் உதவிச் சேவைகள் மற்றும் dynamic alert கட்டமைப்பு போன்றன பாவனையாளர்களுக்கு பெருமளவு பயனைச் சேர்ப்பதாக அமைந்துள்ளது.  

 

Comments