பொதியிடலில் 100 வீத மீள்சுழற்சிக்கான நெஸ்லே லங்காவின் செயற்திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

பொதியிடலில் 100 வீத மீள்சுழற்சிக்கான நெஸ்லே லங்காவின் செயற்திட்டம்

நெஸ்லே லங்கா நிறுவனம் தனது பொதியிடலை 2025ஆம் ஆண்டளவில் 100சதவீத மீள்சுழற்சி அல்லது மீள்பயன்பாடு கொண்டதாக மாற்றும் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றது. பிளாஸ்ரிக் அடங்கலாக தனது பொதியிடல் சாதனங்கள் எவையும் மண்ணையோ, குப்பைத்தொட்டியையோ சென்றடைவதை தவிர்ப்பதே அதன் குறிக்கோள். தேசத்தைச் சுத்தமாகவும், பசுமையாகவும் பேணுவதை முன்னெடுத்துச் செல்லும் இந்த “நல் உணவு நல் வாழ்வுக்கான“ நிறுவனம் தனது “Making My Sri Lanka More Sustainable’ (எனது இலங்கையை மேலும் நிலைபேறு கொண்டதாக மாற்றுதல்) என்ற பிரச்சாரத்தின் கீழ் பசுமை பேணுதல் தொடர்பான பல்வேறு முன்னெடுப்புக்களை ஆரம்பித்துள்ளது.  

இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், பொதியிடல் காரணமாக சூழலுக்கு ஏற்படுகின்ற தாக்கத்தைக் குறைத்து பூமியைப் பேணிப் பாதுகாப்பது எமது கடமையும், பொறுப்பும் என நாம் நம்புகின்றோம். தனது வர்த்தகநாமங்கள், உற்பத்திகள் மற்றும் தொழிற்பாடுகளில் நிலைபேற்றை ஒருங்கிணைப்பதில் நெஸ்லே நிறுவனம் மிக நீண்ட காலமாக பல்வேறு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளது. இலங்கையிலுள்ள நெஸ்லே அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் பிளாஸ்ரிக் கழிவற்ற கலாச்சாரத்தை முன்னெடுத்து வருவதுடன், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் பிளாஸ்திக்கிலான விளம்பர ஊக்குவிப்புப் பொருட்களை நிறுத்துவதற்கான வழிமுறைகளை மிகவும் கவனமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த முன்னெடுப்பினூடாக 2020ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 250மெட்ரிக் தொன் பிளாஸ்திக்கை இல்லாதொழிக்க எம்மால் முடியும், என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஃபேப்ரிஸ் கவாலீன் அவர்கள் குறிப்பிட்டார்.  

சமீபத்தைய முன்னெடுப்பாக, பாடசாலைகளில் முறையான கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கல்வி அமைச்சு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையுடன் நெஸ்லே கைகோர்த்துள்ளது. இந்தக் கூட்டாண்மையினூடாக பாடசாலை சுற்றுச்சூழலியல் சங்கங்களுக்கு அறிவூட்டும் முயற்சிகளை மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை முன்னெடுக்கவுள்ளதுடன், இந்த நற்காரியம் தொடர்பான விழிப்புணர்வை இலங்கையின் எதிர்கால தலைமுறைகள் மத்தியில் வலுவூட்டவுள்ளது.

Comments