இலங்கையில் மூலோபாய முதலீட்டில் கால்பதிக்கும் HCL Technologies | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் மூலோபாய முதலீட்டில் கால்பதிக்கும் HCL Technologies

உலகளாவிய தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் HCL Technologies (HCL) இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதுடன், தனது உலகளாவிய விநியோக மையத்தை கொழும்பில் நிறுவுகின்றமை தொடர்பில் அறிவித்துள்ளது.

பிராந்தியத்திற்குள் தனது இருப்பைக் குறிக்கும் வகையில், உலகளாவிய தனது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக வேலைவாய்ப்பை அதிகரிப்பது, வளங்களை வழங்குதல் மற்றும் உள்நாட்டில் திறமைகளை மேம்படுத்துவதே HCL இன் நோக்கம்.  

1976ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட HCL Technologies உலகளாவிய அடுத்த தலைமுறை தொழில்நுட்ப நிறுவனம் என்பதுடன், நிறுவனங்கள் டிஜிட்டல் யுகத்திற்காக தங்கள் வர்த்தகச் செயற்பாடுகளை மறுவடிவமைக்க உதவி வருகிறது. ஒரு உண்மையான பன்னாட்டு நிறுவனமான HCL இந்தியாவில் தலைமையலுவலகத்தைக் கொண்டுள்ளது, இது பல்வேறு முக்கிய தொழிற்துறைகள் மற்றும் தொழிற்பிரிவுகளில் குறிப்பிடத்தக்க அளவில் உலகளாவிய இருப்பைக் கொண்டுள்ளது. 

இலங்கையில் HCL இன் வணிக மற்றும் மேம்பாட்டு மூலோபாயத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதும், நாட்டில் அறிவு சார் சேவைகள் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் சரியான திறன்மேம்பாட்டுத் திட்டங்களை வழங்குவதும் ஆகும்.

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையுடன் ஒத்துழைத்து, HCL இன் உள்நாட்டு நிறுவனமான HCL Technologies Lanka (Private) Limited அதன் பணி ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை உள்நாட்டு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களுடன் காத்திரமான வழியில் ஒருங்கிணைத்து, நாட்டில் திறமைசாலிகள் குழாத்தை மேம்படுத்துவதற்கும் பயிற்சியளிப்பதற்கும் தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுக்கும்.

Comments