கனவு பலித்தது | தினகரன் வாரமஞ்சரி

கனவு பலித்தது

பனிக்காலப்புரி எனும் ஊர். பெயருக்கு ஏற்றது போல் நல்ல பனிக்காலம் மூடுபனி நிறைந்ததாக இருந்தது. அந்த ஊரில் சித்ரா எனும் ஒன்பது வயது சிறுமி இருந்தாள். அவள் ஒரு ஏழை. அவளுக்கு தாய், தந்தை என எவரும் இல்லை. அவளின் சித்தப்பாதான் அவளை வளர்த்து வந்தார். அவள் எப்போதும் ஓர் கனவு காண்பாள். ஒருநாள் கனவில் அவளுக்கு ஓர் தேவதை தோன்றியது. அதில் அந்த தேவதை கூறியது, நான் உனக்கு ஒரு மாய பென்சிலொன்று தருகிறேன். அதில் என்ன உனக்கு விருப்பமோ அதை நீ வரையலாம். அடுத்த நொடி அது உண்மையானதாக மாறிவிடும் என்று கூறி அதை அவளின் பக்கத்தில் வைத்துவிட்டு மறைந்தது. சித்ரா இரவு கண்ட கனவு பற்றி சித்தப்பாவிடம் சொல்லக் கிளம்பினாள். என்ன ஆச்சரியம் அந்த மாய பென்சில் அவளின் பக்கத்தில் இருந்தது. அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். இதைக்கண்ட அவளின் சித்தப்பா என்னவென்று கேட்டார். சித்ரா தான் கண்ட கனவையும் உண்மையில் நடந்ததைப் பற்றியும் கூறினாள்.  

சித்ரா மாய பென்சிலை சித்தப்பாவிடம் கொடுத்தாள். சித்தப்பா நீங்கள் இந்த மாய பென்சிலை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தேவையை நிறைவேற்றுங்கள் என்று கூறினாள். காலை உணவிற்கு சோறும், மீன் கறியும், பொன்னாங்கன்னிச் சுண்டலும் வரைந்தார். அந்தச் சித்திரம் உண்மையாக மாறியது. காலை உணவு உண்ட பின் மாய பென்சிலை பைக்குள் போட்டுக்கொண்டு சித்தப்பா வேலைக்குச் சென்றார். அவர் வேலை செய்யும் இடத்தில் தினேஷ் என்பவன் இருந்தான். அவன் மிகவும் கெட்டவன். அது மட்டுமில்லாமல் திருடன். தினேஷ் சித்ராவின் சித்தப்பா பைக்குள் இருந்த மாய பென்சிலை திருடிவிட்டான். சித்தப்பா வீட்டுக்கு வந்தார். மாய பென்சிலை காணவில்லை என்று மனமுடைந்து போனார். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் தூங்கிவிட்டனர். தினேஷ் தூங்கும்போது சித்ராவின் கனவில் வந்த தேவதை தினேஷின் கனவில் தோன்றி அவன் கழுத்தை நெருக்கியது. தேவதை கூறியது நீ அந்த பென்சிலை யாரிடம் இருந்து எடுத்தாயோ அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு பென்சிலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உன்னைக் கொன்று விடுவேன் என்று பயமுறுத்தியது. விடியக்காலையில் தினேஷ் மாய பென்சிலை சித்தப்பாவிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். அதன் பிறகு அந்த தேவதை வேறு யாருமில்லை. இறந்துபோன சித்ராவின் தாய்தான் அந்த தேவதை. அதன் பிறகு சித்ராவும் சித்தப்பாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.  


T.F. பனிஹா,
தரம் 07 A, கமு/அல் அஸ்ரம் மகா வித்தியாலயம்,

காரைதீவு. (கி.மா)  

Comments