நாயகனாகும் மொட்டை ராஜேந்தர் | தினகரன் வாரமஞ்சரி

நாயகனாகும் மொட்டை ராஜேந்தர்

இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக்  கொடுப்பவரை ராபின்ஹூட் என்பார்கள். ராபின்ஹூட் என்ற பெயர் இண்டர் நேஷனல் அளவில் புகழ்பெற்றது.  

அந்தப்பெயரையே ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிக்கும்  படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். லூமியர்ஸ் ஸ்டுடியோஸ் என்ற  புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின்ஹூட் கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். 

“மச்சம்பட்டி என்ற கிராமத்தில் மக்கள் மழை இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். இந்த ஊர் மக்களுக்காக தியாகி ராமசாமி குரல்  கொடுக்கிறார்.

அந்தக் கிராமத்தில் சின்னச் சின்ன திருட்டில் ஈடுபடுபவர் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். ஒரு கட்டத்தில் தியாகி இறந்துவிடுகிறார். மக்களுக்கு கிடைக்க இருந்த அரசின் பணத்தை ஊர் தலையாரி திட்டமிட்டு திருட  நினைக்கிறார்.  

இதை அறிந்த ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் அவர்களின் சதித்  திட்டத்தை தடுத்து, அரசாங்கப் பணத்தை ஊர் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தாரா  இல்லையா என்பதை காமெடி கலந்து உருவாக்கி உள்ளோம்” என்கிறார் இயக்குநர்  கார்த்திக் பழனியப்பன்.   

Comments