OPPO விரைவான பழுதுபார்த்தல்; 1 மணி நேரத்திற்குள் Flash-Fix சேவை கொழும்பில் | தினகரன் வாரமஞ்சரி

OPPO விரைவான பழுதுபார்த்தல்; 1 மணி நேரத்திற்குள் Flash-Fix சேவை கொழும்பில்

உலகளாவிய முன்னணி மொபைல் போன் மற்றும் சாதனங்களை வழங்கும் தரக்குறியீடான OPPO, விரைவான பழுதுபார்த்தல் (Quick Repair) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO சேவை மையத்தில் ஒரு குறுகிய நேரத்திற்குள், குறிப்பாக ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில், OPPO மொபைல் தொலைபேசிகளை பழுதுபார்ப்பதற்கான வசதியை இந்த சேவை வழங்கும். 

OPPO Sri Lanka ஆனது, இந்த புதிய, மேம்பட்ட வாடிக்கையாளர் பராமரிப்பு அனுபவத்தை அதன் உலகளாவிய சகாக்களுடன் இணைந்து, OPPO இன் வாடிக்கையாளர் சேவை தத்துவங்களில் விரைவான, நம்பகமான மற்றும் வசதியான சேவையை வழங்குவதற்கான பயன் மிக்க வாடிக்கையாளர் பராமரிப்பை கட்டியெழுப்புவதன் ஒரு படியாகும். இந்த சேவைக்கு பொதுவாக ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதோடு, தொலைபேசியை பழுதுபார்க்கும் வேளையில் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக, அவர்கள் இனிமையான சூழ்நிலையில் உட்கார்ந்து ஓய்வெடுக்கவும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நம்பகத்தன்மையின் அடிப்படையில், OPPO சேவை மையமானது, பழுதுபார்க்கும் பணியில் அதன் தரம்மிக்க உத்தியோகபூர்வ உதிரிப் பாகங்களை மட்டுமே பயன்படுத்துகிறது. அத்துடன் அனைத்து பழுதுபார்ப்பு நடவடிக்கைகளும் தகுதிவாய்ந்த தொழில்முறை தொழில்நுட்ப வல்லுநர்களால் கையாளப்படுவதால், உங்கள் கையடக்கத் தொலைபேசி சிறந்த முறையிலேயே கையாளப்படுவதோடு, அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் இரகசியத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. 

இச்சேவையில் திருப்தியடைந்த வாடிக்கையாளரான அருணாசந்தா டி சில்வா தனது அனுபவத்தை இவ்வாறு தெரிவிக்கிறார், “எனது பழுதடைந்த தொலைபேசியை சீரமைக்க, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் வரை காத்திருந்தேன்." என்றார். 

சேவை மையத்தில் உள்ள ஊழியர்கள் மிகவும் நட்பாகவும், புரிதலுடன் தான் கூறியதை அவதானமாக கேட்டறிந்து நடந்து கொண்டதாக, அவர் மேலும் தனது கருத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சேவையானது தற்போது இலக்கம் 57, W A D ராமநாயக்க மாவத்தை, (மொபிடெல் தலைமை அலுவலகத்திற்கு எதிரே) கொழும்பு 02 இல் அமைந்துள்ள OPPO சேவை மையத்தில் கிடைக்கிறது.

Comments