கொழும்பு றோயல் கல்லூரியில் நவீனமயப்படுத்தப்பட்ட HNB சிறுவர் சேமிப்பு பிரிவு | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு றோயல் கல்லூரியில் நவீனமயப்படுத்தப்பட்ட HNB சிறுவர் சேமிப்பு பிரிவு

தமது நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி கொண்டுசெல்லும் வகையில் இலங்கை வாழ் இளைஞர்களுக்கு மத்தியில் சேமிப்பு பழக்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை பலப்படுத்தும் முகமாக இலங்கையின் முன்னணி வங்கியான HNB நாட்டின் பிரபல பாடசாலையான றோயல் கல்லூரியில் HNB சிறுவர் சேமிப்பு பிரிவை முழுமையாக நவீனமயப்படுத்தியதன் பின்னர் அண்மையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்த புதிய பிரிவு பாடசாலையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போது திறந்து வைக்கப்பட்டதோடு கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர், பீ.ஏ. அபேரத்னவுடன் HNB வாடிக்கையாளர் வங்கி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகள் தொடர்பான பிரதி பொது முகாமையாளர் சஞ்ஜேய் விஜேமான்ன, றோயல் கல்லூரியின் துணை அதிபர், வீ.எஸ். குணதிலக்க, பாடசாலையின் விடயங்களுக்குப் பொறுப்பான பிரதானி, மேம்பாட்டு சங்கங்களின் பிரதானி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“பாடசாலையில் திறந்து வைக்கப்பட்ட இந்த புதிய HNB சிறுவர் சேமிப்பு பிரிவுடன் இந்த முக்கிய திருப்பு முனையான சந்தர்ப்பத்தை கொண்டாடக் கிடைத்தமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

Comments