SOS சிறுவர் கிராமங்களுக்கு தொடர்ந்து உதவும் Allianz World Run | தினகரன் வாரமஞ்சரி

SOS சிறுவர் கிராமங்களுக்கு தொடர்ந்து உதவும் Allianz World Run

அலியான்ஸ் லங்கா நிறுவனம் உலகெங்கிலும் உள்ள அலியான்ஸ் அலுவலகங்களின் அணிகளுடன் இணைந்து SOS குழந்தைகள் கிராமங்களுக்கு முக்கியமான செயற்திட்டங்களுக்கு நிதி திரட்டியுள்ளன.

2016இல் தொடங்கப்பட்டதிலிருந்து, Allianz World Run 28 வெவ்வேறு நாடுகளில் 32 செயற்திட்டங்களில் SOS குழந்தைகள் கிராமங்களை ஆதரித்துள்ளது. இம்முயற்சி, அலியான்ஸ் அணி அங்கத்தவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பொழுதுபோக்குடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதோடு, உலகளவில் பாரிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு Allianz World Run நிகழ்வில் பங்கேற்பாளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட ஓட்டங்கள் மற்றும் சவால்கள் adidas  Runtastic apps வழியாக கண்காணிக்கப்பட்டன. தமது ஒவ்வொரு நிமிட செயற்பாட்டின் மூலமாகவும், மிகவும் உதவி தேவைப்படும் பகுதிகளுக்கு உதவுவதற்காக அலியான்ஸ் நிதியை பங்களிப்பாக வழங்கும்.

இலங்கையிலிருந்து 1,103 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று 121,564 கி.மீ தூரத்தை கடந்துள்ளனர். இது பூமியின் சுற்றளவைப் போல் சுமார் 3 மடங்காக உள்ளதுடன், சொர்க்கபுரியான எங்கள் தீவு Allianz world run 2020 இன் உலகளாவிய மட்டத்தில் 3 ஆவது ஸ்தானத்திற்கு உயர உதவியுள்ளது.

அலியான்ஸ் லங்கா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளர்களும் இந்த முயற்சியில் பங்குபற்றி, இந்த நற்காரியத்திற்காக கூடுதல் நிதியைத் திரட்டுவதற்கு காப்புறுதி நிறுவனத்திற்கு உதவியுள்ளனர்.

“Allianz World Run நிகழ்வானது சமூகம், உறுதிப்பாடு, தலைமைத்துவம் மற்றும் ஆர்வம் போன்ற நன்மதிப்புகளுக்கு எடுத்துக்காட்டாக   அமைந்துள்ளது.

இந்த வியத்தகு முயற்சியின் ஐந்தாம் ஆண்டில் நுழைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதுடன், World Run மற்றும் SOS குழந்தைகள் கிராமங்களுடனான எங்கள் பணிக்கும் இடையிலான வெற்றிகரமான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம் என்று அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியும் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளருமான திருகானி சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

Comments