PCR ஆய்வக இயந்திர நன்கொடைக்காக ஹேமாஸைப் பாராட்டும் இலங்கை தேசிய வைத்தியசாலை | தினகரன் வாரமஞ்சரி

PCR ஆய்வக இயந்திர நன்கொடைக்காக ஹேமாஸைப் பாராட்டும் இலங்கை தேசிய வைத்தியசாலை

உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் நோயாளிகளின் பராமரிப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு சமீபத்தில் முதல் பி.சி.ஆர் (PCR) இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பல உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளைக் கொண்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் மற்றும் கவனித்துக்கொள்ளும் வைத்தியசாலையில் பி.சி.ஆர் இயந்திரம் இருப்பது, இந்நோயாளிகளுக்கு வைரஸ் தொற்றிருந்தால் அதை விரைவாகக் கண்டறிந்து உடனடி சிகிச்சையளிக்க அனுமதிக்கும், மேலும் வைரஸ் தாக்குதலை வெற்றிகரமாக போராடுவதற்கு உதவும். இந்த நேரத்திற்கான சரியான தேவையைப் புரிந்துகொண்ட ஹேமாஸ் நிர்வாகம், பி.சி.ஆர் சோதனைக்காக இந்த அதிநவீன BIO-RAD இயந்திரத்தை அன்பளித்தது.

நன்கொடை குறித்து இலங்கை இருதயவியல் கல்லூரியின் (Sri Lanka College of Cardiology) உடனடி முன்னாள் தலைவரும், இலங்கை தேசிய வைத்தியசாலையில் இருதயநோய் நிபுணருமான (Consultant Cardiologist) வைத்தியர் ஸ்டான்லி அமரசேகர கருத்து தெரிவிக்கையில், “வைத்தியசாலையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் PCR இயந்திரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தமைக்காக ஹேமாஸின் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்க இந்த தருணத்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். 

சமீபத்தில் வரை, தேசிய வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரத்தின் தேவை இருக்கவில்லை, ஏனெனில் இது ஒரு கோவிட் -19 நடைமுறையில் உள்ள வைத்தியசாலை என வகைப்படுத்தப்படவில்லை.

இந்த இயந்திரத்தின் மூலம், மருத்துவமனை உள்ளேயே சோதனைகளைச் செய்ய முடிகிறது, இது பொரெல்லாவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) சுமையை குறைக்கிறது மற்றும் வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கும் அதனை வெற்றிகரமாக போராடுவதற்கும் நமது திறனை பலப்படுத்துகிறது மற்றும் மேம்படுத்துகிறது.” என கூறினார்.

PCR இயந்திர அன்பளிப்பை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட ஹேமாஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன், “இந்த உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தேசம் ஒன்றிணைந்து செயல்படும் இவ்வேளையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை அரசு மற்றும் பொது சுகாதார அமைப்புக்கு ஹேமாஸ் தனது ஆதரவில் உறுதியாக உள்ளது.

பல ஆண்டுகளாக ஹேமாஸ் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கையை ஒரு யதார்த்தமாக்குவதற்கு செயல்பட்டு வருகிறது, மேலும் பொறுப்புள்ள வணிக குடிமகனாக தனது பங்கைத் தொடருகிறது. அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைந்து எங்களுக்கு முன்னால் உள்ள சவாலை சமாளிக்க உழைக்குமாரு நாங்கள் ஊக்குவிக்கிறோம்”, என்று கருத்து தெரிவித்தார்.

Comments