அழுகையும் ஆசையும் | தினகரன் வாரமஞ்சரி

அழுகையும் ஆசையும்

ம்மா என அழுதேன் புரண்டேன்

அன்று உணவு உண்ண முடிவு

தில்லை உறக்கம் வருவதில்லை

வயிற்றை குமட்டி வாந்தி எடுத்து

மயங்கி கிடந்து உருண்டேன்

பல நாள் அயலவர்

ஆரும் கண்டு விடுவார்கள்

என்ற வெட்கம்

பயம் இரவு பகல் என்றில்லாது

எத்தனை துன்பம்

துயரெல்லாம் பட்டு பரிதவித்தேன்

இன்று தாய் என்ற

பேர் எடுக்க சேயாக நீ பிறந்தாய்

கால் அழகு கை அழகு

கட்டித்தங்க சிலையான

உன்னழகை பார்க்க பசிப்பதில்லை

பகல் இரவு தெரிவதில்லை

பட்டதுயர் அத்தனையும் வெயில்

கண்டபனியாக விறைத்து

மகிழ்கிறது என் உள்ளம்

அழுதழுது சலித்தேன்

அன்று அள்ளியள்ளி

அனைக்கிறேன் இன்று- 

Comments