-கந்தளாய் முஸ்தபா சகாப்தீன் | தினகரன் வாரமஞ்சரி

-கந்தளாய் முஸ்தபா சகாப்தீன்

வானம் பார்த்து வாய் பிழந்த

நீரற்ற சேணக் கணவாய்

மழைகண்டு நதி பாய

சேறு கலங்கி நிரம்பிச்

சிரித்து மகிழ்கிறது – மண்ணுள்

மண்டிக் கிடந்த தவளைகள்

மக “மக”வென ஒலியெழுப்பி

மத்தளம் கொட்டி மகிழ்கிறது

வெயபோனின் கணல் பார்வை

தாவரங்களின் கண்ணீராகிறது

பனித்துளிகளின் படிவு

புல் நுனியில் எழினிப்பரிணப்பு

மழையில் பொழிவால்

மண்ணுக்குக்குச் சிறப்பு

மண்ணின் மகிழ்வுச் செழிப்பால்

மனிதனின் வாழ்வுக்குச் சிறப்பு

குமுறும் எரிமலையும்

கொந்தளிக்கும் கடலலையும்

கடவுளுக்குக் கலையாகலாம்

தவித்துக் கலங்கும் மக்களுக்குத்

தாங்காத தண்டனையாகலாம்

கடவுளிடம் கேட்கவேண்டியதைக்

காற்றிடம் கேட்டென்ன பயன்

கண்திறக்க வேண்டியது

எமைக் காத்தருளும் இறையவனே 

Comments