முதல் காதல்.... | தினகரன் வாரமஞ்சரி

முதல் காதல்....

நானும் பள்ளிக் காலத்தை விட்டு  
வெளியே வந்து தொழில்  
புரிந்து திருமணத்தையும் கண்டேன்  
என் பெயர் சொல்ல பிள்ளை  
இன்று எனக்குப் பேரன் பேத்தி  
என்னுடன் உறவாட  
என் பல் விழுந்து கன்னம் குழி  
விழுந்து நரைகள் தோன்றி  
என் மேனியெங்கும் சுருக்கங்கள்  
விழுந்து விட்டன என்றாலும்  
என் முதல் காதல் மட்டுமே  
தனிமையில் என்னுடன் அசைபோடும்  

Comments