உளைச்சல் | தினகரன் வாரமஞ்சரி

உளைச்சல்

தாவித் தாவி  

தாராளமாக  

பாய்ந்து பாய்ந்து  

வளர்ந்த  

வம்சாவளியிலிருந்து  

வந்ததனாலோ என்னவோ  

ஓடி ஓடி  

உழைத்தாலும் உடம்புக்கு  

வருத்தம் தெரிவதில்லை  

கொள்ளை கொள்ள  

முடியாத  

எல்லையற்ற  

அறிவைத் தேடி  

அல்லும் பகலும்  

அலைந்தாலும்  

தேகந் தளர்வதில்லை  

வருத்தமும் தளர்வும்  

வாராதபோதும்  

அடுத்தவர் வாழ்க்கையை  

கசக்கிப் பிழிந்து  

கும்மி அலசி  

காயவிடுவதால் தானே  

மனித குலத்துக்கு  

மன உளைச்சல் வருகிறது

கம்பளையூர்

மஞ்சுளா கிருஷ்ணசாமி

Comments