வரட்சி | தினகரன் வாரமஞ்சரி

வரட்சி

வண்ண வண்ண கனவுகள்   
என் தோட்டத்தில்   
எண்ண எண்ண வியப்பு   
என் முகத்தில்   
ஓடிப் பிடித்து விளையாடிய   
நாட்களை நினைக்கையில்   
ஆடிப்பாடி மகிழ்ந்து   
ஆனந்தத்தில் ஆழ்ந்தோமே   
கள்ளங்கபடம் ஏதுமில்லை   
கருத்து வேறுபாடுமில்லை   
நல்ல நல்ல பாட்டிசைத்து   
நமக்குள் களித்தோமே   
ஆற்றங்கரையில் விளையாடி   
மணல்வீடு கட்டினோமே   
நமக்குள் களித்தோமே   
ஆற்றங்கரையில் விளையாடி   
மணல் வீடு கட்டினோமே   
ஏற்றங்காண ஆசை கொண்டு   
ஏடெடுத்துப் படித்தோமே   
வாட்டம் நாம் கொண்டதில்லை   
வாகை சூடி மகிழ்தோமே   
ஊட்டம்மிக்க உணவு சாப்பிட்டோம்   
நம் அன்னை கையாலே   
அந்தநாள் இனிவருமா   
அகமகிழ்வு கிடைத்திடுமா   
இந்த நாள் இயந்திரமன்றோ   
வாழ்க்கை வரட்சியன்றோ   
 
அலிறிஸாப், அக்குறணை.

Comments