மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம் - மிலிந்த மொரகொட | தினகரன் வாரமஞ்சரி

மலரும் யுகத்திற்கு புதியதோர் வடிவம் - மிலிந்த மொரகொட

நுட்பமான சவால் மிகுந்த காலத்தை கடந்து கொண்டிருக்கும் இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டிய மூன்று இலக்குகள் உள்ளன.

விவசாயத்தை நம்பி வாழும் இந்நாட்டில் தொழிலாளர் சக்தி நூற்றுக்கு இருபத்தைது சதவீதமாகும். மொத்தமாக நாலிலொரு பகுதி இந்நாட்டு மொத்த தேசிய உற்பத்திக்கு அளிக்கும் பங்களிப்பு ஏழு சதவீதமாகும்.

அரச சேவையில் ஈடுபடுபவர்கள் மொத்த தொழிலாளர்கள் சக்தியில் நூற்றுக்கு பதினைந்தெனக் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் நிறைவேற்றும் பணிகளும் நாட்டில் உருவாகும் புதிய தலைமுறை பற்றியும் எமக்கு பிரச்சினைகள் உள்ளன. மூன்றாவது இலக்கும் தகவல் தொழில்நுட்பத்தில் நாம் உள்ள இடத்தை குறிப்பிடுகிறது. இலங்கை கல்வியறிவில் உயர் மட்டத்தில் இருந்தாலும் தகவல் தொழில்நுட்ப அறிவில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதத்துக்கும் குறைந்த நிரலிலேயே உள்ளது.

கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்டு மிகவும் கர்வத்துடன் இருக்கும் எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஆபத்தை நாம் அறியவில்லை. பொது தேர்தல் மேடைகளில் பிரசாரங்களில் தமது பலத்தை காட்டுகிறார்களே தவிர இலங்கை முகங்கொடுத்துள்ள நிலைமை குறித்து கலந்துரையாடுவதில்லை. உற்பத்தி துறை பலவீனமடைந்துள்ளதோடு முன்னேற்றகரமாக காணப்பட்ட சேவைகள் பிரிவு பிரச்சினையிலுள்ளது. மக்கள் சமூகத்தை மேம்படுத்த பெரும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. இலங்கையை பொருளாதார வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கி மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நிலைமையை உருவாக்க  வேண்டுமென்றால் மேலே குறிப்பிடப்பட்ட மூன்றாவது இலக்கு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயம் மிகவும் முக்கியமானது விசேடமாக நெல் உற்பத்தி இந்நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கமாகும் அது மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது. நாட்டில் அரிசியில் தன்னிறைவை அடைய விவசாயத்தால் முடிந்துள்ளது. தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகள் மூலமாகவும் பொருளாதாரத்துக்கு பங்களிப்புள்ளது. விவசாயத் துறையை செயல்திறன் மிக்கதாக்குவதன் மூலமும் நவீனத்துவம் மூலமாகவும் இந்த பங்களிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யலாம். உழைப்பில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதம் ஈடுபட வேண்டும். விவசாயத்துக்கு அரச வழங்கும் ஒத்துழைப்பு பற்றி ஒருபுறம் எண்ண வேண்டும். நெல் விவசாயிகளுக்கு உரம் இலவசமாக வழங்கப்படுகின்றது. அதனை நிறுத்துமாறு யோசனை கூறவில்லை ஆனால் விவசாயத்துக்காக செய்யும் முதலீட்டுக்காகபெறும் பலனை உச்ச மட்டத்துக்கு கொண்டு வர வேண்டும். அரச சேவை பற்றிக் குறிப்பிடும்போது ஒரேயொரு விடயமே கவனத்தில் வரும்.  மக்களுக்கு சேவை செய்ய தேவையானவர்களை விட அதிகமானவர்கள் இருப்பதோடு மக்களுக்கு தேவையான பணிகள் சரியாக நிறைவேற்றப்படாமையும் கவலைக்குரியதாகும்

இலங்கை மனித வளம் மிக்கது திறமையானவர்களை கொண்டது. உலகில் எந்த இடத்திலும் பணியாற்றக்கூடிய திறமையுள்ளவர்கள் தொழில்நுட்பத்தை பாவிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவருக்கான பற்றாக்குறை நிலவுகின்றது.  ஆபிரிக்க வலய நாடுகளில் கூட ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் அதன் செயலிகளின் மூலம் அதிகளவு நன்மைகளை பெறுகின்றார்கள். அநேகமான நாடுகளில் பணப்புழக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு கைத்தொலைபேசி மூலம் பொருட்களை வாங்கவும் பணத்தை செலுத்தவும் செய்கின்றார்கள். தொழில்நுட்ப பாவனைக்கு இலகுவாக மாறமுடியும். அதனை ஊக்குவிக்க வேண்டும்.

விவசாயம், அரச சேவை மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவு ஆகிய மூன்று விடயங்களையும் இணைத்து நாட்டின் நிலைமை பற்றி விரிவாக ஆராய வேண்டியது அவசியமாகும். இன்று நடைமுறையிலுள்ள சம்பிரதாய எல்லைக்கு அப்பால் சென்று புதிய யுகமொன்றை உருவாக்குவதற்காக புத்தாக்கம் குறித்து ஆராய வேண்டும். முடிவு எடுக்க வேண்டும். புதிய யோசனைகள் எதிர்காலத்தில் முன்மொழியப்பட வேண்டும். அத்துடன் அவை பற்றி ஆராய்ந்து செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்வது மிக பலனுள்ளதாகும்.

இலங்கை உலகில் ஏனைய நாடுகளின் போட்டித் தன்மைபற்றி அவதானத்துடன் முன்னோக்கி பயணிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கொவிட் 19 தொற்றின் பின்னர் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அதிகாரத்தை கைப்பற்றும் புதிய பாராளுமன்றம் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்தினால் நாடு எழுச்சி அடையும்.

Comments