பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் | தினகரன் வாரமஞ்சரி

பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம்

'பாடும் நிலா’எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்உடல் பொலிஸாரின் மரியாதையுடன் 21குண்டுகள் முழங்க அவரது பண்ணை வீட்டில்  நேற்றுநல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று முன்தினம் பகல் சுமார் 1.00மணியளவில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். 

 அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலிசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கா ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருந்தார்.  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் காம்தார் நகர் இல்லத்தில் இருந்து தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. 

 பண்ணை வீட்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

 எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அனில்குமார் யாதவ் மரியாதை செலுத்தினார்.   உடல் அடக்கம் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப் பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் நடைபெற்றது.   பொலிஸாரின் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Comments