எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு | தினகரன் வாரமஞ்சரி

எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு

*தங்கு தடையின்றி எரிபொருள்
*கப்பலில் வந்த தரமற்ற பெற்றோல் திருப்பியனுப்பி வைப்பு

ஐஓசி நிறுவனம் தருவித்த பெற்றோல் தரக்குறைவானது என்பதால், எரிபொருள் விநியோகத்தில் சிறு தடங்கல் ஏற்பட்டதென்றும் எனினும், எவ்வித தங்கு தடையுமின்றி பெற்றோலை விநியோகிக்க நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோல் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாததால், பொது மக்கள் எதுவித அச்சமும் கொள்ளத்தேவையில்லை என்றும் ஆயினும் மக்கள் பெற்றோலைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கேட்டுக்ெகாண்டுள்ளார்.

வாடிக்ைகயாளர்களுக்கு விநியோகிப்பதற்குத் தேவையான பெற்றோல் கையிருப்பில் கூட்டுத்தாபனத்தில் பேணப்பட்டு வருகின்றது. எனினும், கடந்த சில தினங்களில் ஐஓசி நிறுவனம் தருவித்த பெற்றோல் தரக்குறைவானதெனக் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதனை விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டதுடன் எரிபொருள் கப்பலும் திருப்பியனுப்பப்பட்டது. இதன் காரணமாகவே பெற்றோல் விநியோகத்தில் சிறு தொய்வு நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

ஆயினும், இதுவரை முழுத்தேவையில் 80% விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை.

எனவே, மக்கள் அநாவசியமாக பீதியடையாமல், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது சிறந்ததென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பொது மக்களைக் கேட்டுக் ெகாண்டுள்ளார்.

இதேவேளை, தரக்குறைவான பெற்றோல் இறக்குமதி செய்ததாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து அறிந்துகொள்வதற்காக இந்தியன் ஒயில் கம்பனியுடன் தொடர்புகொள்ள பல முறை முயன்றபோதும் முயற்சி கைகூடவில்லை.

கடந்த சில தினங்களாகப் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என வதந்திகள் பரவியதால், நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையைக் காணக்கூடியதாகவிருந்தது.

இந்தச் சந்தர்ப்பத்ததைப் பயன்படுத்தி சிலர் செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாதென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமது நிருபர் 

Comments