மு.கா மாநாட்டுக்கு எதிர்ப்பு; சாய்ந்தமருதில் கடையடைப்பு | தினகரன் வாரமஞ்சரி

மு.கா மாநாட்டுக்கு எதிர்ப்பு; சாய்ந்தமருதில் கடையடைப்பு

 சாய்ந்தமருது குறூப் நிருபர்

 

ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட எழுச்சி மாநாடு சாய்ந்தமருதுவில் நேற்று (03) நடத்தப்படுவதை எதிர்த்து சாய்ந்த மருது பிரதேசத்தில் சகல கடைகளும் மூடப்பட்டு கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு எதனையும் ஏற்படுத்தாத விதத்தில் மேற்படி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதுடன் சந்தைகள் சனிக்கிழமைகளில் இயங்கும் நிதி நிறுவனங்கள், அரச நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.

மேற்படி கடையடைப்பை சாய்ந்தமருது சிவில் சமூக அமைப்புகளின்

சம்மேளனம் வர்த்தக சங்கங்கள் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

சாய்ந்தமருது பிரதேசத்திற்கென தனியான உள்ளூராட்சி மன்றத்தை வழங்குமாறு கோரிய மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சாய்ந்தமருது மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் விதத்தில் சுயேச்சை குழுவொன்று களமிறங்கியுள்ளது.

சாய்ந்தமருதுவை பிரதிநிதித்துவபடுத்தும் விதத்தில் அரசியல் கட்சிகளில் எவரையும் நிறுத்த வேண்டாம் என சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் ஸ்ரீங்கா முஸ்லிம் காரங்கிஸ் மட்டும் யானை சின்னத்தில் சாய்ந்தமருது மக்களின் வேண்டுகோளை புறக்கனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இதனை கண்டிக்கும் விதத்தில் மேற்படி கடையப்பு நடத்தப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இந் நடவடிக்கையினை சாய்ந்தமருது மக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கையென புத்திஜீவிகளும், சமூக ஆர்வளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

Comments