ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் மனமார்ந்த நன்றி | தினகரன் வாரமஞ்சரி

ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் மனமார்ந்த நன்றி

மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்புகள் நிறைவு பெற்றதுடன் வாக்களிப்பின் போது பாரதூரமான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தலுக்கு முன்பிருந்து தற்போது வரையிலும் கடமையாற்றிக்கொண்டிருக்கும் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள, ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொலிஸார், அதிரடிப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினர், முப்படையினர் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சில மக்கள் பிரதிநிதிகள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் அத்துமீறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இம்முறை வாக்களிக்கும் போது புகைப்படம் எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

குறிப்பாக தேர்தல் சட்டவிதிகளை மீறுபவர்களை கடுமையான சட்டம் பின் தொடரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அமைதியான முறையில் தேர்தல்கள் நடைபெற ஒத்துழைத்த வாக்காளர்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

மிக முக்கிய விடயமாக வாக்களிப்பு தினத்துக்கு முன்னைய தினம் அதாவது 9ஆம் திகதி வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கு வாகன வசதியின்மை காரணமாக சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. இவ்வாறு அசௌகரியத்துக்குள்ளாகியமைக்காக அவர்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். 

Comments