வெள்ளம், மண்சரிவு எச்சரிக்கை வழங்க அரசு புதிய திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

வெள்ளம், மண்சரிவு எச்சரிக்கை வழங்க அரசு புதிய திட்டம்

ஷம்ஸ் பாஹிம்

 

சுனாமி முன்னெச் ​ெசரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு மண்சரிவு மற்றும் வெ ள்ளம் தொடர்பிலான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இடர் முகாமைத்துவ அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இடர் முகாமைத்துவ நிலைய கூட்டத்தில் இதன் சாத்தியம் பற்றி ஆராயப்பட்டுள்ளது.=

நாடு பூராவும் 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி சுனாமி தொடர்பான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் கடும் மழையுடன் இடைக்கிடை ஏற்படும் வௌ்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெ ள்ள நிலைமை மற்றும் காலநிலை எச்சரிக்கைகள் என்பவற்றை சுனாமி கோபுரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இடர்முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமல்நாதன், நாடுபூராவும் உள்ள 77 கோபுரங்களில் 76 கோபுரங்கள் இயங்குகின்றன. அவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் தினமும் ஆராய்ந்து வருகிறேன். இவற்றைப் பயன்படுத்தி ஏனைய எதிர்வு கூறல்கள், முன்னெச்சரிக்கைகள் விடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த இரு வருடங்களில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் 200 இற்கும் அதிகமானரவர்கள் உயிரிழந்துள்ளனர். பல கோடி சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த நிலையில் மக்களைத் துரிதமாக அறிவூட்டுவதற்கு நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்து வது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதற்காக 2020 ஆம் ஆண்டாகும் போது இரு டொப்ளர் ராடார் கருவுகளை புத்தளம் மற்றும் பொத்துவிலில் ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாவும் அவர் கூறினார்.

இதேவேளை அனர்த்தத்திற்கு முன்னர் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் மக்களை அறிவூட்டுவதற்காக நாளை 21 ஆம் திகதி முதல் ஜூன் 2 ஆம் திகதி வரை அனர்த்த அபாயம் உள்ள 10 மாவட்டங்களில் அறிவூட்டல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. சிரமதானங்கள்,முன்னெச்சரிக்கை நிகழ்ச்சிகள் அறிவூட்டல்கள் என்பன இடம்பெற உள்ளன.(பா)

 

Comments