பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை; தமிழக அமைச்சரவையில் இன்று முடிவு | தினகரன் வாரமஞ்சரி

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை; தமிழக அமைச்சரவையில் இன்று முடிவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசிப்பதற்காகத் தமிழக அமைச்சரவை இன்று அவசரமாகக் கூடுகிறது.

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது.

தமிழக அரசு முடிவெடுத்து அதனை ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி 7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Comments