15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை | தினகரன் வாரமஞ்சரி

15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இடி, மின்னலுடன் கடும் மழை

பலத்த இடி, மின்னலுடன் கடுமையான மழை பெய்யக்கூடுமென 15மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய,மேல், சப்ரகமுவ, வடமத்திய உள்ளிட்ட மாகாணங்களுக்கும், காலி மாத்தறை, மன்னார், அநுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கும் இவ்வாறு கடும் மழை பெய்யக்கூடுமென சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் 100மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகும்.

மொனராகலை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பொலன்னறுவை, பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் சாதாரண மழை வீழ்ச்சி பதிவாகும் என்பதுடன், அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் குறைந்தளவான மழை பெய்யக்கூடும்.  

இடி, மின்னல் ஏற்படும் தருணங்களில் பாதுகாப்பை உறுதிச்செய்துகொள்ளுமாறும் மரங்களின் கீழ், வயல், விளையாட்டு மைதானம், தேயிலைத் தோட்டங்கள் போன்ற இடங்களிலும் தண்ணீரிலும் இருக்க வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதுடன், காற்றின் வேகமானது மணிக்கு 70-,80கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் காலநிலை குறித்த தகவல்களை அறிந்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)  

Comments