பயங்கரவாத தடுப்பு பிரிவில் எட்டு மணிநேர தீவிர விசாரணை | தினகரன் வாரமஞ்சரி

பயங்கரவாத தடுப்பு பிரிவில் எட்டு மணிநேர தீவிர விசாரணை

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நேற்று (15) பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் 08மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். நேற்றுக்காலை அவர் 9.45மணியளவில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவுக்குச் சென்ற ஹிஸ்புல்லா மாலை 5.45  மணியளவிலேயே வெளியேறினார் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் 22ஆம் திகதி இரவு 10.00மணியளவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது கல்குடா ஹோட்டலொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் அரேபியர்கள் இருவரை சந்தித்து பேச்சு நடத்தியமை தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன் பிரசாரமே முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பயங்கரவாத ஒழிப்புப்பிரிவுக்கு விசாரணைக்காக நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

Comments