தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகார தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகார தீர்வு

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிக்க முடிவு

வட,கிழக்கு தமிழ் தலைமைகள் தமிழர்களின் தன்னாட்சிக்காகத் தீர்வைவொன்றைத் தயாரித்து தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக அறிய முடிகிறது.  

தமது தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, எழுத்துமூலம் உறுதியளிக்கும் தரப்புக்கு தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும்  இவர்கள் மேற்கொண்டுவருவதாக வடக்கின் பிரதான அரசியல் கட்சியொன்றின் தலைவர் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளனர். இன்னமும் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என எவரும் தமது தரப்பின் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதன் காரணமாக தமிழ் மக்கள் அவசரப்பட வேண்டியதில்லை.  

என்றாலும், இம்முறை வடக்கு,கிழக்கை பிரதி நிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் கட்சிகள் சார்பில் தெற்கின் ஜனாதிபதி வேட்பாளருக்கு நாம் ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவுள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. வடக்கு,கிழக்கின் அனைத்து தமிழ் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகள் இணைந்தே இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.  

அனைத்துக் கட்சிகளினதும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தயாரிக்கும் தீர்வுத்திட்டத்தை வழங்கவுள்ளோம்.  

எவர் எழுத்துமூலமான உறுதியை வழங்க முன்வருகிறாரோ அவருக்கு எமது ஆதரவை வழங்குவோம் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.  

சுப்பிரமணியம் நிஷாந்தன்   

Comments