துயர வாழ்வு | தினகரன் வாரமஞ்சரி

துயர வாழ்வு

கீழ்வானம் வெளுத்து வருவது விடியலை பறைசாற்றுகின்றது. காகக் கூட்டத்தின் சத்தம் கா... கா... என கரைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறகடித்து பறந்த வண்ணமிருந்தன.  

 இன்னிக்கு மேந்தலப்பாடு எல்லாத் தொழிலாளர் கூட்டத்தினர்கள கூட்டிக் கொண்டு போகும் பொறுப்பும் கடமையும் மண்டாடி சின்னவனைச் சார்ந்ததாகும்.  

 நேத்து வைரன் தோணியடி வரயில்ல அதால கதிரன் சம்மாட்டி மண்டாடி சின்னவனைக் கூப்பிட்டு ராமுவை உடன் வரும்படி வேலம் அனுப்பினான்.  

 என்னத்துக்கு எதுக்கு என புரியாமல் திண்டாடியவனாக காணப்பட்ட ராமு என்ன ஒரு நாளும் கூப்பிட்டு பேசாத கதிரன் சம்மாடியார் எதுக்கு எதென்ன நெனச்சவனாக... தனது ஒடம்மெல்லாம் புள்ளிக்கவே.... கால் கை நடுங்கியவனாக... காணப்பட்டான்.  

 மண்டாடி சின்னவனைப் பார்த்து ராமு நீங்க முன்னுக்கு போங்க... நா பின்னால நடந்து வாரங்க. அட அருவல்லாம் சரிவராது ஒன்ன கையோடு கூட்டி வரச் சொன்னாரு. நீ என்னோடு வராட்டா அவர புத்தி ஒனக்கு தெரியும் தானே....!  

 ராமு...! நீ நேத்து தோணியடிய வராத.... கோபம் போல... தெரியுதப்பா....! இந்தா... பாரு! நீயெல்லாம் தொழிலுக்கு வராட்டா யாரு அந்த தொழில செய்வது. பத்தாததற்கு லட்சமாக பணத்த வாங்கி நீங்க கொஞ்சம் யோசி ராமு...!  

 வாடா... என்னோடு... என மண்டாடி சின்னவன் கடுமையான மொரயில் கூறினான்.  

 கதிரன் சம்மாட்டியார் கரவலையில் தொழில் செய்யும் மண்டாடியார் என்ற பதவிகளுடன் மேல் வல மண்டாடி கீழ் வல மணடாடி சம்மாம்பாத்தி என்ற ஒரு தொழிலாளர் கூட்டமே கரவலையை நடத்துபவர்கள்.  

 ஆனால், இந்த கூட்டங்கள் இருந்தாலும் சம்மாட்டியாரிடம் கை நீட்டி நிந்தப்பணம் வாங்கினால் (முற்பணம்) போதும் நோய் நொடி இல்லாமல் தொழில் செய்ய வேண்டும் லீவு... அதபத்தி பேச கூடாது... மரண வீடா அல்லது எழவு எட்டு வூடா இரிக்கட்டும் எட்டி பார்க்க முடியாது.  

 இந்த கரவல பாதயடியில் மண்டாடி பதவி வகிக்கிற சின்னவன் தாறுமாறாக ஒரு வாத்த சம்மாட்டியாரிடம் போட்டு கொடுத்தா போதும் அவர் தனது சுயரூபத்த காட்டிடுவார். சாத்தி வச்சி ஆணியத்தண்டால் விலாசுவதுடன் தனது பாதணி கூட விழித்துக் கொள்ளும்.  

 கதிரன் சம்மாட்டியார் தனது மேந்தலப் பாட்டை உழவு இயந்திர மூலம் வேவாத வெய்யில் ஆசை எண்ணங்களை மனதில் விளைத்தவராக மனக்கோட்ட கட்டியவராக தனது கரவலப்பாட்டை அடைந்தார்.  

 அங்கு கண்ட அந்த அருவருப்பான காட்சி தனது நெலயை நெட்டுரவச்சது.  

 தொழிலாளர்கள் தோணியடிவராததைக் கண்டு கொதித்தெழுந்தார். அவரின் கண்கள் சிவந்தன. மொகம் கொப்பென்று வெளுத்தது. முறுக்கேறிய மீசையை முறுக்கி கோபத்தை மண்டாடி சின்னவனிடம் கொட்டித் தீர்த்தார்.  

 உடப்பு கடற்றொழிலாளர்கள் தன்மானம் மிக்கவர்கள். ஒழைத்து ஒழைத்து ஓட்டாண்டியாக தனது கௌரவத்த இழக்காதவர்கள் இம்மக்கள். புலம்பெயர்ந்து இக்கிராமத்தில் குடியேறியவர். இவர்களின் ஆரம்ப குலத்தொழில் புகையில. ஆனால் இக்காணிகளின் பதிவுகள் புகையில காணியென்றே பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. புகையில தொழிலாளனது நீண்ட கால பலனை தரக்கூடியது. இடநெருக்கடியாலும் குறைந்த வருமானத்தை தரக்கூடியதால் இத்தொழில கைவிட்டு குறுகிய காலத்துக்கு கூடிய வருவாய் தரக்கூடிய கடற்றொழிலை இம்மக்கள் ஜீவாதாரத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.  

 இத்தொழிலை நடத்தும் சம்மாட்டி என்பவர் மொதலாளி. நிந்தப்பணம்... முற்பணம் இப்பணத்தை வாங்கும் தொழிலாளி சகல கைங்கரியத்துக்கும் ஆளாகுபவர். தனது தொழில முன்னத்த வேண்டுமென்றால் சாராயம் கசிப்பைக் கொடுத்து தொழில செய்வார். சம்மாட்டியின் கையாளே மண்டாடி. இவரே தொழில வழிநடத்துபவர்.  

 கதிரன் சம்மாட்டியாரின் கைப்பொம்மையாக இயங்கும் மண்டாடி சின்னவன் தொழிலாளர்களை இயக்கி வழிநடத்தும் உத்தம புத்திரன்... இவன் வச்சதே சட்டம். இவர் சொல்லுவதை மீற முடியாது. அதிகாரம் கொண்டவர்.  

தனது கரவலப் பாதையை அச்சாணியாகி இயக்கும் சின்னவன். கதிரவன் சம்மாட்டியின் விசுவாசத்துக்கு பெயர் போனவர்.  

நிந்தப்பணத்தை கொடுப்பது மட்டும் கதிரன் சம்மாட்டியாரின் பொறுப்பாகும். மற்ற எல்லா வேலைகளையும் பார்ப்பது செய்வது மண்டாடியார் சின்னவனின் அதிகார வரப்புக்கு உட்பட்டது.  

கரைவலைப் பாதைக்கு ஒன்று இரண்டு இலட்சம் நிந்தப்பணம் கொடுத்து தொழிலுக்கு சேந்தா... ஐப்பசி மாதம் தொடங்கி சித்திரை மாதம் பதினைந்தாம் திகதி வரை தொழில் செய்ய வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் விலகுவதோ... அல்லது பணத்தை தெரிப்பி கொடுப்பதோ முடியாத காரியம் இது எமதூரின் எழுதப்படாத பஞ்சாயத்து தொழில் மொரயில் ஒன்று.  

 காலையில் எழுந்து பழைய ஊர்காய் சோத்துடன் கஞ்சிவாளியில் இடப்பட்ட சோத்துடன் வாகனத்தில் ஏற்றி கடவல தொழிலுக்கு கொண்டு போனால் மண்டாடி சின்னவன் பாராமுகமாக நடந்து கொள்ளுவான். ராவு... பவல பாக்க மாட்டான் தொழிலாளர்களுக்கு பனி... குளிர் தெரியாது. வேவார வெயிலில் ஐம்பது அறுபது கம்மானுடன் வல வலச்சா அவர்கள் படும் வேதனை துன்பங்கள் தொயரங்கள் சொல்லி மாறாது. மன சாந்தப்படுத்த கள்ளு, சாராயம் தாராளமாகவும் ஏராளமாகவும் கொடுத்து தனது கர்மத்த செய்து முடிப்பான் மண்டாடி சின்னவன்.  

இதற்காக தெரிந்தும் தெரியாத மொரயில் சம்மாட்டி கதிரவன் கிம்பலமாக சின்னவனுக்கு கொடுப்பான்.  

கதிரன் சம்மாட்டி நாளய தொழில எந்த மொரயில் நடத்துவது சோல நீர்பாடு என்றால் எப்படி வலி வலைப்பது பட்ட நீர்பாடு என்றால் எந்த மொரயில கரைப்பாயுவது கடும் வெயில் வந்தா நம்மட தொழிலாளர் கூட்டத்துக்கு கள்ளு, சாராயத்தை அல்லது கசிப்பு கொடுப்பது எப்படிப்பா நம்ம ஆக்கள சமாளிப்பது என்பன போன்ற கருத்துக்களை மண்டாடி சின்னவனின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.  

 ஆனா... இந்த மொரகள சமாளித்து சாணக்கியத்துடன் சமாலித்து தொழில ஓட்டக்கூடியவன் மண்டாடி சின்னவனுக்கு தண்ணி பட்டபாடு!  

 பாதைய கடலில் பாச்சி முன் மண்டாடி சின்னவன் தொழில் திட்டங்கள் வகுத்து கொள்ளுவான். பாதயில் எத்தன கம்மான் ஏத்துவது யார் யாரெல்லாம் தண்டு வலிப்பது. மேல் வல கீழ் வலக்கு பொருத்தமானவர் யார் யார். மீன் கூடுதலாக அப்புட்ட... அத என்ன மொரயில் மடியிலிருந்து கரக்கி கொண்டு வருவது போன்ற நடைமுறைகளை சக தொழிலாளர்களிடம் பேசி முடிவெடுப்பதில் சின்னவனுக்கு கைவந்த கல...!  

 தனது மேந்தலப்பாட்டில் மீன் எக்கசக்கமாக பிடிபட்டது. பட்ட மின் பாச அப்படியே சுலையாக கதிரன் சம்மாடியாரின் கைக்கு போய் சேர்ந்துவிட்டது.  

 மண்டாடி சின்னவன கூப்பிட்டு போன கெழம செலவு விஸ்தாரத்த தனது அதிகார தொனியில் விலாவாரியாக எடுத்துரைத்தார். இந்தா பா...ர்... மண்டாடி சாப்பிட்ட செலவு இவ்வளவு டாக்டர் கூலி இம்மட்டு மண்ணெண்ண டீசல் செலவு வாடி பத்து வலி நம்ம ஆக்களுக்கு கொடுத்த பத்துவலி... போன்ற சீட்டோலைய மண்டாடி சின்னவனின் காதில போட்டு வச்சார்.  

என்ன சம்மாட்டியார்... இன் வேறு செலவு இரிந்தா நா கூசாமல் சொல்லுங்க... வேவாத வெயில நின்று ஒழைத்த பணம் சம்மாட்டி ஏ மண்டாடி சின்னவா வளவள என கதக்காத நா... ஒனக்கெல்லாம் தந்த பணத்துக்கான வட்டிய பாரு. லட்சம்... லட்சமாக நிந்தப்பணம் தந்தனடா அந்த பணத்த நா... மரத்திலிருந்தால் பறிச்சன் சொல்லுங்கடா என வீராப்புடன் கர்ச்சித்தார்.  

 அட மண்டாடி நீ இதில தலையிடாத இந்த இந்த பணத்த வச்சிக்கொள். என புடிகாச யாரும் தெரியாமல் கொடுத்தான்.  

 இர. பெற்ற சின்னவன் மயங்கிவுட்டான் சம்மாட்டி கதிரவன் சொல்வது எல்லாமே சரிதானடா என தலம் போடும் பொம்மயாக மாறிவிட்டான் மண்டாடி சின்னவன். அநியாயத்துக்கு தொண போகும் ஆசாமியாகி விட்டான்.  

அன்று வெள்ளிக்கிழமை கிழமை பங்கு பார்த்து கணக்கு வௌக்குக்கு முடிவு கட்டப்படும். வாடியில் குத்துவிளக்கு ஜெகஜோதியாக சுடரிட்டு பிரகாச வண்ணமிருந்தது. எல்லாத் தொழிலாளர்களும் வாடியில் முகாமிட்டு தவம் கிடந்தனர் பங்குப் பணத்தை வேண்டி!  

கதிரன் சம்மாட்டி தொழிலாளர்களைப் பாத்து இந்த கெழம நீயெல்லாம் புடிச்ச மீன் காசு ஒனக்கெல்லாம் தெரியுமா? 6லட்சம் ரூபா பங்கு கொமிசன் செலவு கிளவெல்லாம் போவ மூணுலட்சம் தேறியுள்ளது. இதத்தான் நாம இந்த கெழம பணத்த புரிக்கிறோம். ஒனக்கெல்லாம் தெரியும் தானே என்னப்பத்தி.  

 இந்த கரவலப்பாதயில் கஷ்டப்பட்டு தண்டு வழிக்கும் சம்பாம்பாக்கியமான சிவநாதன் ஆனா சம்மாட்டியார் இந்த மொர மீன் பாடு மத்தவங்கடவிட கூடுதலாக அம்புடிச்சி நாங்க நெனச்சம் இந்த மொர சல்லிய இரட்டிப்பாக கெடக்கும் மென.  

சம்மாட்டியார் இரிகுல ஏதே ரிக்கிசி நடந்துள்ளதென மந்தவங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டினான் வேவாத வெய்யில நிண்டு மாடா ஒழச்சம் நேரத்து சாப்பிடாமல் நின்று ஒழுச்சம் ஏ இந்த அநியாயத்த செய்ரிங்க சம்மாடியார் என கேள்விய கேட்டான் சிவநாதன்.  

 சீ.. பாய்ந்தார்.... பாம்பாக... கதிரன் சம்மாட்டி... ஏன்ட ஒன்ற நோய் நொடிக்கு எம்பணம் எட்டு எழவுக்கு எம் பணம் தேவ ஒன்ற புள்ள படிவுக்கு ஓடி வாரா பணம் கேட்டு. தலயிடியா சல்லி சல்லியென அரிக்கிரா! இந்த மாறி பணத்த அரிச்சி வாங்கும் போது தெரியாது அட ஒனக்கெல்லாம் தந்த நிந்தப்பணத்தின் வட்டிய பாரு இதெல்லாம் தெரியாமல் பேசாதங்கடா என தனது நியாயத்த முன்வச்சி பேசினார் சம்மாட்டியார்.  

மீண்டும் சிவநாதன் தங்கள் பக்கம் சார்பாக கேள்வியை தொடுத்தான். ஆம்...! சம்மாட்டியார் நாங்க புடிச்ச மீன் பங்கு விபரத்தத்தாம் கேட்கிறமே அல்லாம ஒங்கட பணத்தை கேக்க இல்லங்க!  

 அட.. அட...! எனக்கிட்ட ஜல்ராவ காட்டாதீங்க...! என்ன தெரியும் தா​ேன...? நான் யாரென என கோபாவேசத்துடன் கர்ஜித்து பேசினார் சம்மாட்டியார்.  

பின்னர் தன் பேச்சு தொனிய கட்டமாக்கிக் கொண்டவரான சம்மாட்டியார்... சிவநாதனை ஆரத்தழுவி சாவதாணமாக ஆணைத்து மற்ற தொழிலாளர்கள் காணாத மொரயில் பச்சத்தாள் ஐந்த சிவநாதனின் சட்டயிக்கில் வச்சி ஆருதல் படுத்தினார்.  

அத்தோடு, பங்குப்பணம் பகிர்ந்தளித்த போது கதிரவன் சம்மட்டியாரை கொதிப்படைய வச்சியுள்ளது என்ன பக்கம் பேச வேண்டி மண்டாடி சின்னவன் கூட தொழிலாளர் பக்கம் சார்பாக வரிந்து பேசியது கடுப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சம்மாட்டியாருக்கு கோபத்தையும ஏற்படுத்தியது.  

 சம்மாட்டி கதிரவன் மண்டாடி சின்னவனை வரச் சொல்லி... ஓங்கி வூட்டார் அரை... சீ! நீயும் ஒரு மனுசனா ஒனக்கு தார சொகுசு போதாதா எனக்கு ஒம்மேல கொஞ்சமாவது விஸ்வாசம் இல்ல பாரு பங்குப் பணம் பகிர்ந்தளித்த போது கேள்வி மேல கேட்டு என்ன உயிரே வாங்கிட்டாங்க புடிச்ச மீன் கிலோ எத்தன? மடிமாத்திய தொக என்ன? ஏலத்தில போட்டு வித்த கிலோ மீனின் விலை என்ன? வாடி பத்து... கிழமையில் கொடுத்த பத்து வலி மொத்த பணம் என்ன விபரங்கள கேட்டு என்ன திக்குமுக்காட வச்சாங்க. இந்த நிந்தப்பணம் வாங்கிய பரதேசி கூட்டம்.  

என்பக்கம் பேச வேண்டிய மண்டாடி கொஞ்சமாவது எம்பக்கம் பேசாமல் நிந்தப் பணம் வாங்கிய கூட்டப் பக்கம் நிண்டத பத்தி கோபாவேசத்துடன் கதிரன் சம்மாட்டி காணப்பட்டான்.  

மண்டாடி சின்னவனை அருகில் வரும்படி கூறி ஓங்கி அரையொன்றை விட்டார். அப்படியே தொழிலாளர் கூட்டம் கப்சிப்பாகி விட்டனர்.  

அட... இந்தா பாருங்கடா... மீனுக்கு வெல இப்பயில்ல வாடிச் செலவு பத்து கூடி இரிக்கு வேலா வேலயிக்கு காலம்பர மத்தியான பகல் சாப்பாடு வேற டாக்டருக்கு டீசல் செலவு மீன் பொருக்கும் பொம்புளக்கு கூலி செலவு இப்படியாக கணக்கு வௌக்குகள கூட்டி பாருங்கடா என தன் பக்க நியாயத்தை எடுத்து கூறியவராக சம்மாட்டி கதிரவன் காணப்பட்டார்.  

அடிவாங்கியதக் கூட கணக்கெடுக்காதவனான மண்டாடி சின்னவன் அங்கு வந்து வக்காலத்து வாங்கியவனாக சம்மாட்டியாருக்கு ஒத்து ஊதியவனாக தாலம் போட்டான்.  

மண்டாடி சின்னவன் நிலய அறிந்த கதிரன் சம்மாட்டி இத வச்சி கொள்ளப்பா நீ நா... சொல்லுவதெற்கெல்லாம் நீ தாலம் போடு என கூறியதும் சரியங்க சம்மாடியார் என்றார்.  

 பங்கு புரிக்கும் எடத்துக்கு நேரே வந்த சம்மாட்டியார் சில நியாயங்களை எடுத்துரைத்தார். அவர் சொன்ன கருத்துக்களை உள்வாங்கிய தொழிலாளர்களும் சாராயத்துக்கு அடிபணிந்து சரியங்க என ஒப்புக்கொண்டனர்.  

மண்டாடி சின்னவன் தொழிலாளர் கூட்டத்தைப் பாத்து சரியப்பா இந்த கெழம தொழில நல்ல மொரயில செய்து நாமலே மீன்கள வித்து கணக்கு வெலக்க நாங்கள் பாத்து நேர்த்தியான மொரயில் தொழில செய்வோம் என எடுத்துரைத்தான்.  

 இத கூறிய கையோடு மண்டாடி சின்னவன் நேர ராக்காய் வூட்டுக்கு நேரே போய் பத்து போத்தல் கசிப்பை எடுத்துக் கொண்டு வாடி வந்து ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஊத்திக் கொடுத்தான்.  

பாடசாலை படிப்பை கற்காவிட்டாலும் அனுபவப் படிப்பை மூலதனமாகவும் வாச்சால் தன்னை கெட்டிக்காரனாக கட்டினாலும் ஊரை பத்தி வெவரமோ தம் பூர்வீகத்ைதக் கொஞ்சமும் அறியாததையும் அறியாமையுடன் இருக்கும் கதிரன் சம்மாட்டியாருக்கு தொழில் சார் பின்புலத்தையும் தொண்மைகளையம் புலம்பெயர்ந்த தன்மையும் மண்டாடி சின்னவன் பெருமைகளை விலாவாரியாக எடுத்துச் சொன்னான்.  

இந்த...! பாருங்க...!! சம்மாட்டியார்...! இந்த ஊர் சனங்க ஒவ்வொரு எடுக்களிலிருந்து இடம் பெயர்ந்த நல்ல தண்ணிருக்கும் சிறந்த தொழிலுக்காகவே இந்த ஊர வந்தடைந்தார்கள்.  

 நம்மட மூதாதங்க ஒவ்வொரு எடுங்களில் கொஞ்சநாள் குடியிருப்பாங்க அந்த எடம் புடிக்காவுட்டா வேரிடம் போவாங்க அருவும் புடிக்காவுட்டா இன்னோரு எடத்த பார்ப்பாங்க இப்படியாக நாடோடி கூட்டமாக அலஞ்சி திரிந்து க​ைடசியில் நம்மட ஊர வந்தடைந்தார்கள்.  

ஆனால் இந்த ஊரில் குடியேறினாலும் எமது மூதாதைகள் வீசினரும் வெறுங்கையுடன் வரயில்லை. நல்ல தொழில் மொரய அத நுணுக்கங்கள அருட நெளிவு. சுளிவுகள... இனம் கண்டுதான் இந்த மீன்பிடி தொழில செய்ய மொயச்சி எடுத்தாங்க.  

இப்படியெல்லாத்தையும் கொணந்தவங்க சம்மாட்டியார் என்ற மொதலாளியையும் வச்சி.... பாரம்பரியத்துடன் இத்தொழில சகல காலமாக செய்துவாரங்க என்ற கருத்த கதிரன் சம்மாட்டியாரின் காதுக்கு எத்தி வச்சான் மண்டாடி சின்னவன்.  

இத கேட்ட கதிரன் சம்மாட்டி அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டவனாக தமது முதாைதகளின் வாழ்வாார பின்புலத்த எண்ணியவனா கொட்டாவி விட்டு தன் மொகத்த புரங்கயியால் தவி எழுச்சியுற்றவனாக அன்னாந்து பார்த்தான்.   தொழிலாளர்களிடத்தில் இவ்வகையான உணர்வொன்று ஊற்றெடுத்தன நாங்க ஒழக்க வந்தவங்க ஒழப்பே எம் மூலதனம். நாங்க இங்க ஊம்ப வரில்ல நிந்தப்பணம் வாங்கி விட்ட மென்றால் மானம் கொட்டு ஒழப்ப எமக்கு தேவயில்ல.  

இன்னிக்கு சம்மாட்டியிடம் பணம் இரிக்கும் நாளக்கு யார் யாரிடமோ...? நாங்க பொறந்த காலத்திலிருந்து வெறும் நிரந்தர சம்மாட்டியாராக இந்த ஊரில் இருந்ததில்ல... என தத்தம் உள்ளகெடக்ய வெளிப்படுத்து துயரத்த நெனத்து நொந்து கொண்டனர.  

அத்துடன் நாம எப்படித்தான் ஆடி ஓடி உழைத்தாலும் மச்சம் புடிச்சவனுக்கு மிச்சமில்லையடா என தமது தொழில நெனச்சு நொந்து கொண்டனர். இதுவே இத்தொழிலின் யதார்த்தம்  எனவும் வாயிக்குல் முணுமுணுத்து நின்றனர்.  

அன்று எவ்வாறு இவ்வூரில் இத்தொழில் மொர இரிந்த தோ இன்னமும் வழுவாமல் பிசகாமல் பேணும் தாற்பரியம் கடப்பிடித்து வருவத பார்க்கக் கூடியதாக இரிக்குங்க   சம்மாட்டியார் என்ற தொழில் முதலாளி சகல வல்லமையும் படைத்த மொதலாளி கூட்டம் அத வழி நடத்தி பந்தம் பிடிக்கும் மண்டாடி அவருக்கு பக்க வாத்தியம் பாடும் மேல் வல மண்டாடி கீழ் வல மண்டாடி சம்பாம்பாக்கி கீழ் நிலைத் தொழிலாளி என்ற முறைமைகள் இன்றும் நீடிப்பதுடன் நிந்தப்பணம் வாங்கிய தொழிலாளர்கள் கைதிகளாக பேசாமடந்தயாக எடுப்பார் கைப்புள்ளகளாக காட்சியளிக்கும் பரிதாப நிலை தொடர் கதையாக தொடர்ந்த வண்ணமாக இருக்கின்றது.  

அன்று கீழ் வல... மண்டாடியும் மேல் வல மண்டாடியும் தொழில் செய்ய வரயில்ல. கதிரன் சம்மாட்டியார் சீ...! பாய்ந்தார். இருவரையும் அழைத்து தனது பல்லவிய பட்டோலயாக விரித்தார்.  

அட... நா... ஒங்களுக்கு காசி காசி என்றில்லாமல் பணம் பண...மா? கொட்டியிருக்கிறேன். ஒங்களுக்கு கோவில் விழாவுக்கு கேட்டவுடனே சல்லி ஒன்ற புள்ள கலியாணத்து பணம் செத்த வூட்டு காசி எழவு செலவு எங்காசி எதக்கு தரயில்ல என சொல்லுங்கடா பாப்போம்.  

 நீ... எல்லாம் நிந்தப் பணம் வாங்கிய தொழில் செய்யுயம் ஆக்க நான் சொல்லுவத நீயெல்லாம் கேக்க வேண்டும். கை நீட்டி வாங்கி இந்த நிந்தப் பணத்துக்கு ஆறு மாதம் காலத்துக்கு கட்டாயமாக தொழில் செய்ய வேண்டும். இருதான் விதி. மொற ஊர் கடத் தொழில் சட்டம்  

 இத மீறி நீயெல்லாம் நடந்து கொண்டா நா பொல்லாதவனாகி விடுவேன்.   புரிந்ததா என ஆளக்கல பாத்து கதிரன் சம்மாட்டியார் எச்சரித்தான்.  

கதிரன் சம்மாட்டியாரின் ஒபதேசத்தை உள்வாங்கிய தொழிலாளர் கூட்டம் எல்லோரும் ஒரே கொரலில் ஐயா சம்மாட்டியாரே நீ சொல்லுவது தேவவாக்கு நீ சொன்னபடி நடப்மே நீங்கள் கீறிய போட்ட நாம் கடக்கமாட்டோம் வல இழுத்த பட்டியலுடன் மெய்மறந்து நின்றனர்.  

ஓய்... மண்டாடி சின்னவன் இன்னிக்கு இன் கணக்கில் கள்ளு... கசிப்ப... வாங்கி கொடு.... நல்லா குடிச்சி வெறிக்கட்டும்.  

ஓசி... சாராயத்த மொடக்கு மொடக்கென உள்ளட்டு தடுமாறு நின்றனர்.  

சம்மாட்டி கதிரவன் எமது தெய்வம் இனி நாம யாருக்கும் அஞ்சத் தேவயில்ல.  

மண்டாடி சின்னவன் தனது மனத்துக்குள்ளே இந்த நிந்தப் பணத்திலிருந்து இந்த தொழிலாளர் கூட்டம் எப்போது விடுதலை பெறும் என நெனத்தவனாகி மீண்டும் கடற்கரை நாடி கஞ்சி வாளியுடன் நடயத் தொடர்கின்றார். 

உடப்பூர் வீரசொக்கன்

Comments