க.பொ.த (சா/த) பரீட்சை நாளை ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

க.பொ.த (சா/த) பரீட்சை நாளை ஆரம்பம்

 

4,987 பரீட்சை நிலையங்களில்

 

07 இலட்சத்து
17,008 பேர் தோற்றுவர்
 

2019ஆம் ஆண்டுக்கான க.பொத.சா.தரப்பரீட்சை நாளை 02 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்பீ. சனத் பூஜித தெரிவித்தார்.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,987 பரீட்சை நிலையங்களில் 07 இலட்சத்து 17 ஆயிரத்து 08 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

பாடசாலை பரீட்சார்த்திகளாக 04 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 02 இலட்சத்து 83 ஆயிரத்து 958 பேரும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சைக்கான இணைப்பு நிலையங்களாக 541 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைக்குத் தேவையான அனுமதி அட்டை, அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணமொன்றைத் தவறாது எடுத்துச் செல்ல வேண்டும்.

பரீட்சைக்கு வரும் போதோ அல்லது பரீட்சை நடைபெறும்போதோ இடையூறுகள் ஏற்படுமாயின் உடனடியான பரீட்சை மண்டப பொறுப்பாளரின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.

பரீட்சை நடைபெறும் காலங்களில் மேலதிக வகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள், விழாக்கள், கூட்டங்கள் நடத்துவது முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட விடயங்கள் மீறப்படுமானால் உடனடியாக பரீட்சை திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும்.

பரீட்சைக் குழறுபடிகள், மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யவென மேலதிகமாக கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

முறைப்பாடுகளைப் பரீட்சைத்திணைக்களத்தின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது 0112-784208 அல்லது 0112-2784537 அல்லது 0113188350 அல்லது 0113140314 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியுமென்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Comments