ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் நேற்றும் 3 மணி நேரம் வாக்குமூலம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் நேற்றும் 3 மணி நேரம் வாக்குமூலம்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்றும் 3 மணி நேரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றுக்காலை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இரண்டாவது நாளாகவும் வருகை தந்திருந்தார்.

அவரிடம் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று முன்தினமும் (06) பிற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments