கைதான பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கும் 13 வரை விளக்கமறியல் | தினகரன் வாரமஞ்சரி

கைதான பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கும் 13 வரை விளக்கமறியல்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இம் மாணவர்கள் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 08 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.    அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இம்மோதல் தொடர்பில் கருவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Comments