மத்திய கொழும்பில் ரணில், சஜித் கடும் போட்டி; பிரசார பணி தீவிரம் | தினகரன் வாரமஞ்சரி

மத்திய கொழும்பில் ரணில், சஜித் கடும் போட்டி; பிரசார பணி தீவிரம்

கொழும்பு மாவட்டத்தில் இம்முறை கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள பின்புலத்தில் மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமாச ஆகியோர்  தமது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் கடுமையான போட்டி நிலவும் நிலையில் ஐ.தே.க இரண்டாக பிளவுப்பட்டு தேர்தலை சந்திக்கிறது. கொழும்பில் ஐ.தே.க பிரதான வேட்பாளராக அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க களமிறங்கியுள்ளதை போன்று ஐ.ம.சக்தியின் பிரதான வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கியுள்ளார். இருவரும் கொழும்பில் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 

கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் போட்டியிடும் பைரூஸ் ஹாஜியின் ஏற்பாட்டில் அளுத்கடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்க தமது பிரசாரத்தை ஆரம்பித்திருந்தார். 

அதேபோன்று மத்திய கொழும்பு பிரேமதாச, சுவனித மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச தமது பிரசாரத்தை ஆரம்பித்திருந்தார். இன்று கடுவலையில் பல பகுதிகளில் சஜித் பிரேமதாச பிரசாரம் மேற்கொள்ளவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments