பாபர் அஸாம் விரைவாக 1000 ஓட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

பாபர் அஸாம் விரைவாக 1000 ஓட்டங்கள்

சந்தர்ப்பம் சர்வதேச ஒருநாள் போட்டியில் விரைவாக 1000 ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அசாமும் இணைந்து கொண்டார். இவர் 21 போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ளார்.
கடந்த வாரம் பேர்த் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியின் போது 84 ஓட்டங்களைப் பெற்ற போது இம்மைற்கல்லை அஸாம் கடந்தார்.
விரைவாக 1000 ஓட்டங்கள் பெற்றோர் வரிசையில் மேற்கிற்திய தீவுகளின் அதிரடி வீரர் விவ்யன் ரிட்ச்சட்ஸ், இங்கிலாந்து அணின் கெவின் பிட்டர்சன், ஜோனதன் ரூட் மற்றும் தென்னாபிரிக்காவின் குயிண்டன் டி. கொக் ஆகியோர் 21 இன்னிங்ஸில் இதற்கு முன் இச்சாதனையைப் புரிந்திருந்தனர்.
 

Comments