பெண்கள் ஆசிய கிண்ணம்; இந்தியா மீண்டும் வெற்றி | தினகரன் வாரமஞ்சரி

பெண்கள் ஆசிய கிண்ணம்; இந்தியா மீண்டும் வெற்றி

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா 08விக்கெட் வித்தியாசத்தில் வென்று 07ஆவது தடவையாகவும் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இதில் 06தடவைகள் சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது. களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி 20ஓவர் முடிவில் 09விக்கெட் இழப்பிற்கு 65  ஓட்டங்களே எடுத்தது.  

அதி கூடிய ஓட்டங்களாக இனோகா ரணவீர 18ஓட்டங்களை எடுத்தார். இந்திய அணியில் ரேணுகா சிங் 3விக்கெட்டை கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 02விக்கெட்டுகளை எடுத்தனர்.  

இதையடுத்து 66  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 8.3ஓவர்களில் 02விக்கெட்டிழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.  

ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 51ஓட்டங்களை  எடுத்தார். இந்திய அணி 08விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  கிண்ணத்தை கைப்பற்றியது.  

இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளது. நேற்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

Comments