இங்கிலாந்து---தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர்: இவ்வாரம் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இங்கிலாந்து---தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர்: இவ்வாரம் ஆரம்பம்

சம்பியன் கிண்ணத் தொடர் தோல்விகளால் சோர்வுற்றிருந்த அணிக்கு தென்னாபிரிக்க அணித் தலைவரும் அதிரடி வீரருமான ஏ. பி். டி வி்ல்லியர்ஸின் ஓய்வு பற்றிய திடீர் அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அது பற்றிய செய்திகள் தற்போது ஊடகங்களிலும், டுவிட்டர் பக்கங்களிலும் அடிக்கடி வெளிவந்தவண்ணமுள்ள நிலையில் தென்னாபிரிக்க-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இவ்வாரம் லண்டனில் ஆரம்பமாகின்றது. கடந்த வாரம் இங்கிலாந்து மண்ணில் முடிவடைந்த டி-டுவெண்டி போட்டிகளிலும், அவ்வணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச தொடரிலும் தென்னாபிரிக்க அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

எனவே தொடர் தோல்விகளால் சோர்ந்து போயுள்ள தென்னாபிரிக்க அணி இவ்வாரம் ஆரம்பமாகும் இரு நாடுகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரிலாவது பலம்வாய்ந்த இங்கிலாந்து அணிக்கெதிராக சாதித்து தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையாகப் போராட வேண்டியேற்படும்.

 

 

டெஸ்ட் போட்டி அட்டவணை

ஜுலை 06 1வது போட்டி லண்டன் ஓவல்

ஜுலை 14 2வது போட்டி நொட்டிங்ஹாம்

ஜுலை 27 3வது போட்டி லண்டன் லோட்ஸ்

ஆகஸ்ட் 04 4வது போட்டி பர்மிங்ஹாம் 

Comments