சாதனை | தினகரன் வாரமஞ்சரி

சாதனை

மகளிருக்கான உலக கிண்ணம்

மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் பிரிஸ்டோல் கவுண்டி மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் களத்தடுப்பு செய்ய தீர்மானம் செய்தது. அதற்கிணங்க முதலில் ஆடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை குவித்தது. இதில் இலங்கை மகளிர் அணியின் முன்னாள் தலைவர் சாமரி அத்தபத்து மிக மிக அபாரமாக ஆடி 143 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 178 ஓட்டங்களை பெற்றார்.

இது மகளிர் ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் தனி ஒரு வீராங்கனையால் பெறப்பட்ட 3ஆவது அதிகபட்ச ஓட்டங்களாகும். இலங்கை அணி சார்பாக சாமரியை தவிர சசிகலா சிறிவர்தன 24 ஓட்டங்களை பெற்றார். மகளிர் ஒருநாள் வரலாற்றில் அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனை பட்டியல்

1. பெலிண்டா கிளார்க் (அவுஸ்ரேலியா) 229*

2. தீப்தி ஷர்மா (இந்தியா) 188

3. சமரி அதபத்து (இலங்கை) 178*

4. சார்லோட் எட்வர்ட்ஸ் 173*

5. ஸ்டாஃபனி டெய்லர் (மேற்கிந்திய தீவுகள்) 171

6. டாமி பீமோண்ட் (இங்கிலாந்து) 168*

7. சுசி பேட்ஸ் (நியுசிலாந்து) 168

8. ரேச்சல் ப்ரீஸ்ட் (நியுசிலாந்து) 157

9. லிசா கீட்லி (அவுஸ்ரேலியா) 156*

10. கிளாரி டெய்லர் (இங்கிலாந்து) 156 

Comments