சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து அஸார் அலி ஓய்வு | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து அஸார் அலி ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஸார் அலி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தனது கவனத்தை செலுத்தும் முகமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அஸார் அலி அண்மைக்காலமாக பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கட் குழாமில் உள்ளடக்கப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக அவர் 2018 ஜனவரியில் நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தினைக் கைப்பற்றுவதில் அஸார் அலி கனிசமான பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணியினுடனான இறுதிப்போட்டியில் 59 ஓட்டங்களைப் பெற்றதுடன் லீக் சுற்றில் இந்திய அணிக்கெதிராக 50 ஓட்டங்களையும் அரையிறுதிச்சுற்றில் இங்கிலாந்து அணிக்கெதிராக 76 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியுசிலாந்து அணிக்கெதிரான தொடரில் அஸ்ஹர் அலிக்கு மாற்றீடாக உள்வாங்கப்பட்ட இமாமுல்ஹக் மூன்று சதங்கள் மற்றும் பல அரைச்சதங்கள் பெற்று பாகிஸ்தான் அணியில் நிரந்தர இடத்தினைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸார் அலி இதுவரை பாகிஸ்தான் அணிக்காக ரி 20 போட்டிகளில் விளையாடியதில்லை என்பதுடன் 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 12 அரைச் சதங்கள் உள்ளடங்களாக 39.09 எனும் சராசரி ஓட்டப் பெறுதியுடன் 1845 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments