ஈரானில் இனி கால்பந்து போட்டிகளை கண்டுரசிக்க பெண்களுக்கு அனுமதி! | தினகரன் வாரமஞ்சரி

ஈரானில் இனி கால்பந்து போட்டிகளை கண்டுரசிக்க பெண்களுக்கு அனுமதி!

கால்பந்து இரசிககையொருவர் தீக்குளித்ததன் எதிரொலியாக, சுமார் 40 ஆண்டுகால தடையை உடைத்தெறிந்து, ஈரானில் இனி பெண்களுக்கு கால்பந்து போட்டிகளை கண்டு இரசிக்க அந்நாட்டு அரசு, அனுமதி வழங்கியுள்ளது. 

கால்பந்து விளையாட்டில் அதிக விருப்பம் கொண்டிருந் ஈரான் இரசிகை ஒருவர், ஆண் வேடமிட்டு கால்பந்து போட்டியை இரசித்ததால் தனக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்ற அச்சத்தில் தீக்குளித்து இறந்துவிட்டார். 

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, கால்பந்து கூட்டமைப்பு பெண்களை கால்பந்து போட்டியை நேரில் காண அனுமதிக்குமாறு ஈரான் அரசுக்கு அறிவுறுத்தியது. 

இந்த நிலையில், இதற்கு இணங்கி ஈரானில் இனி பெண்களுக்கு கால்பந்து போட்டிகளை கண்டு இரசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய டெஹ்ரானில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியை பெண்கள் நேரில் கண்டு இரசிக்கவுள்ளனர். 

அசாடி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ஈரான் மற்றும் கம்போடியா அணிகள் மோதுகின்றன.

Comments